புதுதில்லி, மார்ச் 6-
தேசிய ஊரக சுகாதாரத் திட்டச் செயல்பாடுகளில் திருப்தி ஏற்படாத நிலையில் இத்திட்டச் செயல்பாடுகள் குறித்து, முழு விசாரணை நடைபெற வேண்டும் என நாகா அன்னையர்கள் சங் கம் வலியுறுத்தியுள்ளது. நாகாலாந்து மாநிலத்தில் உள்ள பல்வேறு பழங்குடி யினருடன் இணைந்த தலை மை அமைப்பாக இந்தச் சங்கம் உள்ளது. தேசிய சுகா தாரத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் களைந்தெ றிய வேண்டும் என இந்த அமைப்பு வலியுறுத்துகிறது.இது தொடர்பாக நாகாலாந்து ஆளுநர் நிகில் குமாரிடம், கடிதம் அளித் ததுடன் அதன் நகலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல செயலாளர் உள்ள தில்லி அலுவலகத் திற்கும் அனுப்பியது. நாகா லாந்தில் தேசிய ஊரக சுகா தாரத்திட்டத்தில் உள்ள முறைகேடுகள் குறித்து ஆதாரங்களையும் அவர்கள் வைத்துள்ளனர்.
விசாரணைக்குழுவில் நாகா பெண்கள் சங்கம் பரிந் துரைக்கும் 2 நிபுணர்களை நியமிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் தலைவர் மாநில சுகாதாரத் திட்ட உறுப்பினராக இருக்கலாம்.இத்திட்டத்தில் குறை பாடுகள் வெளிப்படையாக தெரிகின்றன.
நிதிமுறை கேடு, திட்டத்தை செயல் படுத்துவதில் ஆர்வமின்மை முரண்பாடு தலைதூக்கி உள்ளன.நாகா அன்னையர் சங் கத்தின் பல மாவட்ட பிரிவு கள், மாவட்ட சுகாதார சொசைட்டியின் உறுப்பி னர்கள் என்பதை அறியா மல் உள்ளன. மாவட்ட சுகாதார அமைப்பு கூட்டங் களுக்கு அவர்களுக்கு அழைப்பு வருவது இல்லை. இது குறித்து நாகா அன் னையர் சங்க தலைமை அமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பல மாநிலங்களில் தேசிய கிரா மப்புற சுகாதாரத்திட்ட அமலாக்கம் சுணக்கமாக இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் கரடுமுர டான மலைப்பகுதி கூடுதல் காரணமாக அங்கிருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.