இந்திய கிரிக்கெட் அணி ஒரே ஒரு இருபது 20 கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வதற்காக தென் ஆப்பிரிக்கா செல்கிறது. தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் குடியமர்த்தப்பட்ட 150ம் ஆண்டு நிறைவடைவதையொட்டி இப்போட்டி நடைபெறுகிறது. இதனையொட்டி தென் ஆப்பிரிக்க வீரர் கல்லீஸ் கவுரவிக்கப்படுவார்.ஏப்ரல் 22 வரை ஆசியக்கோப்பை நடைபெறுகிறது. அதில் ஆடும் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா செல்லும். இருபது 20 போட்டிகளில் சச்சின் ஆடுவதில்லை. அவருக்குப் பதிலாக இந்திய அணியில் ராபின் உத்தப்பா இடம்பெறக்கூடும். ஏப்ரல் 14ல் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. தென் ஆப்பிரிக்கா போட்டி நடைபெறும் நாள் இதற்கு முன்னதாக இருக்கும்.

Leave A Reply

%d bloggers like this: