நாமக்கல், மார்ச் 6-
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து வரும் எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக் செவ்வா யன்று 6வது நாளாக நீடித்து வருகிறது.புதிய வாடகை ஒப்பந் தத்தை ஏற்படுத்த வேண் டும், டெண்டரில் புதிய தாக கலந்து கொண்ட 600 வாக னங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி டேங்கர் லாரி உரிமையார் கள் கடந்த 29 ம் தேதி நள் ளிரவு முதல் தமிழகம் உள் ளிட்ட 5 மாநிலங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டு வருகின்றனர். செவ் வாயன்று (மார்ச் 6) 6வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது.எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் கேஸ் நிரப் பும் மையங்களுக்கு சமை யல் கேஸ் கொண்டு செல் லும் பணி நிறுத்தப்பட்டுள் ளது. இதனால் கேஸ் விநி யோகம் முற்றிலும் பாதிக் கப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு நடத்திய முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியில் முடி வடைந்தது.ஆயில் நிறுவனங்கள் புதிய வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க ஒத்துகொண்ட போதிலும் அவர்கள் அறிவித்த வாடகை உயர்வு டேங்கர் லாரி உரி மையாளர்களுக்கு திருப்தி கரமாக இல்லை. லாரி ஸ்டிரைக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள் வது குறித்து நேற்று நாமக் கல்லில் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது.சங்க தலைவர் பொன் னம்பலம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத் தில் மாநில லாரி உரிமையா ளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி, எல்.பி.ஜி. சங்க செயலாளர் கார்த்திக், நாமக் கல் தாலுகா லாரி உரிமை யாளர்கள் சங்க செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்துக்கு பின் தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தவைவர் பொன்னம் பலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சென்னையில் நடை பெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஒரு டன் கேஸ் எடுத்து செல்ல ஒரு கிலோ மீட்டருக்கு அதிக பட்சம் ரூ. 2.50 மட்டுமே தர முடியும் என ஆயில் நிறு வன அதிகாரிகள் கூறினர். இந்த வாடகையை பெற்று கொண்டு தொழில் செய்ய முடியாது. எனவே சம வெளிப்பகுதியில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 2.80, மலைப் பகுதிக்கு ரூ. 2.90 தரவேண் டும். அதுவரை டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும். இவ்வாறு சங்க தலைவர் பொன்னம்பலம் தெரிவித் தார்.எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடர்வ தால் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமையல் கேஸ் தட்டுபாடு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விட் டது. குறிப்பாக தமிழகத் தில் சமையல் கேஸ் விநி யோகம் முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.