தூத்துக்குடி, மார்ச் 6-
தூத்துக்குடி, சுந்தர வேல்புரம் முதல் தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்குள்ள பார் வாசலில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு பேர் சைக்கிளில் கேஸ் சிலிண் டரைக் கட்டிக் கொண்டி ருந்தனர். இதுகுறித்து அங் கிருந்த பொதுமக்கள் விசா ரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசியுள் ளனர். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.போலீசார் வந்து விசா ரணை நடத்தியதில், அந்த சிலிண்டர் டாஸ்மாக் பாரில் இருந்து திருடப் பட்டதுஎனதெரியவந்தது. திருடிய அந்த நபர்கள் கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் சந்திரசேகர் (33), ஜோதி பாசு நகரைச் சேர்ந்த மணி மகன் ஆதிலிங்கம் (32) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த இரு வரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வரு கின்றனர்.

Leave A Reply