சேலம், மார்ச் 6-சேலத்தில் மின்நிறுத்ததால் ரூ.5 கோடி மதிப்புள்ள விசைத்தறி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடுமையான மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் விவசாயிகள், சிறு- குறுதொழில் அதிபர்கள், மாணவர்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டதில் விசைத்தறி தொழில்களுக்கு வாரம் ஒருமுறை மின்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதனால் உடையார்பட்டி,அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மற்றும் பல பகுதிகளில் இயங்கி வந்த விசைத்தறிகள் நிறுத்தப்பட்டன. எப்போதும் விசைத்தறி ஓசைக் கேட்டு வந்த இந்த பகுதிகளில் இப்போது அமைதியான சூழ்நிலை நிலவுகிறது.வாரத்தல் ஒருநாள் மின் விடுமுறை அறிவிப்பால் ரூ.5கோடி வரை விசைத்தறித்துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன என்று சங்கத்தலைவர் பெருமாள் தெருவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, இந்த நிலை நீடித்தால் சேலம்மாவட்டத்தில் விரைவில் கஞ்சித்தொட்டி திறக்கும் நிலை ஏற்படும். இந்த நிலையைப் போக்க தமிழக அரசு தனி கவனம் செலுத்தி வெளி மார்க்கெட்டிலிருந்து மின்சாரம் வாங்கி தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.