இந்திய ஹாக்கி அணியின் ஒலிம்பிக் தயாரிப்பு முகாம் பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மையத்தில் செவ்வாயன்று தொடங்கியது. திங்களன்று (பிப்ரவரி 5) நடந்த வழிகாட்டும் குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டது.தேசிய ஒலிம்பிக் முகாம் குறித்து ஹாக்கி இந்தியா, இந்திய விளையாட்டு ஆணையம், விளையாட்டு அமைச்சகம் ஆகிய மூன்றுக்கும் இடையில் முகாம் தொடங்கும் தேதி குறித்து சர்ச்சை ஏற்பட்டது. முகாம் மார்ச் 13ல் தொடங்கும் என்று ஹாக்கி இந்தியா முன்னர் கூறியிருந்தது. ஒலிம்பிக் தகுதி பெற்றவுடன் மார்ச் 5ல் முகாம் தொடங்கும் என்று அறிவித்தது. தேதி மாற்றம் குறித்து தகவல் இல்லை என்று அரசு கூறியது. மார்ச் 2,3,5 ஆகிய தேதிகளில் அரசுக்கு கடிதம் எழுதியதாக ஹாக்கி இந்தியா கூறியது. இதையடுத்து வழிகாட்டும் குழு கூடி தற்போதைய முடிவை எடுத்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.