1973-ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரையில் அமெரிக்க ஆதரவுடன் இருந்த சர்வாதிகாரி களின் காலத்தில் கடுமையான மனித உரிமை மீறல்கள் இருந்ததை தற்போதைய உருகுவே அரசு ஒப்புக் கொண் டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க நாடுகளுக்கிடையில் அமைக்கப்பட்டிருக்கும் சட்டமன்றத்தின் முடிவுக்கு உருகுவே அரசு கட்டுப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. சர்வதேச அளவில் எங்கள் பொறுப்பை ஒப்புக்கொள்ளும் வகையில் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக உருகுவே அரசு கூறியுள்ளது.* * *
அரபு மக்கள் எழுச்சியைத் துவக்கி வைத்த துனீசியா வில் உண்மையான ஜனநாயகம் கோரி ஆயிரக்கணக் கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் துனீ சில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு மாற்றங் கள் கொண்டு வரப்பட்டது என்று சொல்லிக் கொண்டாலும் அடிப்படையான உரிமைகள், அரசியல் சீர்திருத்தங்கள் என்று மக்களுக்கு வழங்கப்படாத நிலையே நிலவுகிறது. இவற்றைக் கொண்டு வருவதற்கான வேலைகள் நடக்க வேண்டும் என்று கோரியே ஆர்ப்பாட்டம் நடந்தது.* * *
அண்மையில் ஈரானில் உள்ள மனித உரிமை மீறல் கள் பற்றி பிரிட்டன் அரசு பல்வேறு அறிவுரைகளை வெளி யிட்டிருந்தது. இதற்கு ஈரான் தரப்பிலிருந்து கண்டனம் எழுந்தது ஒருபுறம். மறுபுறத்தில் பிரிட்டனின் சமத்துவம் மற்றும் மனித உரிமை ஆணையம், சொந்த நாட்டின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியுள்ளது. பாரம்பரிய மாக இருந்துவரும் சிவில் உரிமைகள் தொடர்ந்து மீறப் படுகின்றன என்று அந்த ஆணையத்தின் அறிக்கை ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

Leave A Reply