ஹைதராபாத், மார்ச் 6-
தெலுங்கு திரைப்பட நட் சத்திரமும், ஆந்திர சட்டமன்ற உறுப்பினருமான சிரஞ்சீவி மாநிலங்களவை உறுப்பினரா வது உறுதியாகியுள்ளது. மாநி லங்களவை உறுப்பினர் எம்.பி. தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. மார்ச் 30ம் தேதி 15 மாநிலங்க ளில் 58 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திர மாநிலத்தில் மாநிலங்களவை எம்பி பதவிகள் ஏப்ரல் மாதம் காலியாகின்றன. 4 காங்கிரஸ் உறுப்பினர்கள், தலா ஒரு சிபிஐ, தெலுங்குதேசம் உறுப் பினர்கள் பதவிக்காலம் முடிவ டைகிறது. இந்த இடங்களை பூர்த்திசெய்வதற்காக தேர்தல் நடைபெறுகிறது.ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்யும், காங்கிரசுக்கு 4 உறுப்பினர்கள் தேர்வு ஆவது உறுதியாகியுள்ள நிலையில் ஒரு இடம் சிரஞ்சீவிக்கு கிடைக்கிறது.
கடந்த ஆண்டு காங்கிரசுடன் சிரஞ்சீவியின் பிரஜாராஜ்யம் கட்சி இணைந் தது. இந்த இணைப்பின் ஒப்பந்தப்படி சிரஞ்சீவி அமைச்சர் பதவி பெறுகிறார். அதற்கான முதல்கட்ட நடவ டிக்கையாக எம்.பி. ஆகிறார்.ஆந்திர சட்டமன்றத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக் கள் எண்ணிக்கை அடிப்ப டையில் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை அக் கட்சி மீண்டும் பெறும். தெலுங் குதேசம் 2 இடங்களை பெறு வதற்கு வாய்ப்பு உள்ளது.பதவிக்காலம் முடியும் 4 காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருவரான, முன்னாள் மத்திய இணையமைச்சர் தாசரி நாரா யண ராஜ் மீண்டும் எம்பியாக விரும்புகிறார்.
மற்றொரு முன் னாள் அமைச்சரான ரேணுகா சவுத்ரி தற்போது காங்கிரசின், அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக உள்ளார்.தில்லியில் தனக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, மாநிலங்களவை உறுப்பின ராக விரும்புகிறார். தொழிலதி பர் ஜி.வி.கிருஷ்ண ரெட்டியை எம்பியாக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் கிரண்குமார் முயற்சிக்கிறார். தெலுங்கானா விவகாரத்தில் ஆர்வம் காட் டும் கேசவராவ் மீண்டும் எம்பியாக விரும்புகிறார். அவர் எம்பியாவதை முதல்வர் விரும்பவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.