ஈரோடு, மார்ச் 6-ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக்கிடக் கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று நடைபெற உள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் துவக்கி வைக்க உள்ளார்.ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவித்திட வேண்டும் எனக் கோரி இந்திய மாணவர் சங்கம், அனைத்துக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், ஈரோடு மாவட்ட அனைத்து சுமைப்பணியாளர்கள் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர் கடந்த 2008 -ம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதனடிப்படையில் இன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் காலை 9 மணியளவில் கல்லூரியின் நுழை வாயில் முன்பாக மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது.இக்கையெழுத்து இயக்கத்தினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே. தங்கவேல் துவக்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார்.
மேலும் இதில் சுமைப்பணி சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ப. மாரிமுத்து, கல்வி பாதுகாப்புக்குழுத் தலைவர் பேராசிரியர் என். செந்தாமரை, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ். கனகராஜ், அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் என். சிவநேசன் ஆகியோர் உட்பட இதர தொழிற்சங்கத்தினர், வர்க்க வெகுஜன அமைப்பினர் திரளாக கலந்து கொள்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: