மதுரை, மார்ச் 6- சிஐடியு போக்குவரத் துத் தொழிலாளர்கள் பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 18ல் கோட்டை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திங்களன்று மதுரையில் அரசு போக்குவரத்து சம் மேளன (சிஐடியு) நிர்வாகி கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சம்மே ளன உதவித் தலைவர் எஸ். கே.தியாகராஜன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் போக்குவரத்துத் தொழிலா ளர்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சம்மே ளன பொதுச் செயலாளர் ஏ.பி.அன்பழகன், சிஐடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஆர். கருமலை யான், சம்மேளன துணைப் பொதுச் செயலாளர்கள் வீ.பிச்சை, கே.ஆறுமுகநயி னார், ஸ்டாலின், காளியப் பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் மாநிலம் முழுவதும் 30 ஆயி ரம் போக்குவரத்துத் தொழி லாளர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற் றத் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து சம்மேள னம் (சிஐடியு) வாழ்த் துக்களை தெரிவித்து தீர் மானம் நிறைவேற்றப்பட் டது.
அதிமுக அரசு பதவி ஏற்று 10 மாதங்களாகியும் போக்குவரத்துத் தொழி லாளர்களின் நீண்ட கால கோரிக்கைகள் தீர்க்கப்பட வில்லை. இது தொடர்பாக சம்மேளனம் அரசுக்கு மனுக்கொடுத்தும், அமைச் சரிடம் நேரில் வலியுறுத்தி யும் எந்த விதமான முன் னேற்றமும் இல்லை என் பது வேதனையளிக்கக் கூடி யதாக உள்ளது. 2010ம் ஆண்டு அரசு போட்ட ஒப் பந்த குளறுபடிகளே இன் னும் நீடிக்கிறது. பிரச்சனை கள் தீர்க்கப்படவில்லை. 2003ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர் களுக்கு புதிய பென்சன் திட் டம் பொருந்தாது என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த தேர்தல் வாக்குறுதியை பதவியேற்ற பிறகு தமிழக முதல்வர் நிறைவேற்றவில்லை. போக் குவரத்துப் பராமரிப்புத் துறையில் கடும் ஆள் பற் றாக்குறை நிலவுகிறது.
புதிய தொழிலாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலித் தொழிலாளர் கள் பணிநிரந்தரம் செய்யப் படவில்லை. இத்தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந் தபட்ச சம்பளம் வழங்க போக்குவரத்து நிர்வாகம் முன்வரவேண்டும். மேலும் போக்குவரத்து நிர்வாகத்தில் அனைத்து நிர் வாக மட்டங்களிலும் ஆளுங் கட்சியினரின் தலையீடு உள்ளது. வண்டி போஸ் டிங் போடுவது முதல் அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு நிர்வாகத்தை செயலிழக்கச் செய்கின்றனர் ஆளுங்கட்சியினர்.
எனவே இக்கோரிக்கைகளை வலி யுறுத்தி ஏப்ரல் 18ம்தேதி அன்று சென்னை கோட்டை நோக்கி பேரணி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட் டது. இப்பேரணியை விளக்கி தமிழகம் முழுவதும் ஏப்ரல் 16,17 ஆகிய தேதி களில் பிரச்சாரம் நடை பெற உள்ளது. இந்த பிரச் சாரங்களிலும் பேரணியி லும் சம்மேளனத் தொழி லாளர்கள் எழுச்சியுடன் பங்கேற்க வேண்டும் என்று சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது. (நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.