திருநெல்வேலி, மார்ச் 6 -நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தேமுதிக வேட் பாளரை ஆதரித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் எம்.பி. , மாநில செயற்குழு உறுப்பினர் பி. சம்பத் ஆகியோர் பிரச் சாரம் மேற்கொள்கின்றனர்.
சங்கரன் கோவில் இடைத் தேர்தல் மார்ச் 18 ம் தேதி நடைபெறுகிறது. இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேமுதிக விற்கு ஆதரவு தெரிவித்துள் ளது. அதன்படி தேமுதிக வேட்பாளர் முத்துக் குமாரை ஆதரித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர். மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் எம்.பி மார்ச் 8 ம் தேதி மாலை 4 மணியளவில் திருவேங்கடத்தில் பேசு கிறார். அதனை தொடர்ந்து சங்கரன்கோவில் முப்பி டாதி அம்மன் கோவிலின் முன்பு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற் றுகிறார். முன்னதாக சங் கரன்கோவில் வரும் மத் தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜனுக்கு காலை 8 மணிக்கு ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மார்ச் 12 ம் தேதி நடைபெறும் பிரச் சாரத்தில் பங்கேற்கிறார். அவருக்கு மாலை 4 மணிய ளவில் வன்னிக்கோனேந் தலில் வரவேற்பு கொடுக்கப் படுகிறது. மாலை 5 மணிக்கு பணவடலிச்சத்திரத்தில் பேசுகிறார். மாலை 6 மணிக்கு குருக்கள்பட்டியில் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவி லில் வடக்கு ரதவீதியில் நடைபெறும் பொதுக்கூட் டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். மாநில செயற்குழு உறுப் பினர் பி.சம்பத் மார்ச் 14ம் தேதி குருவிகுளம், கீழ நீலிதநல்லூர், மேல இலந் தைகுளம், அழகு நாச்சியார் புரம், வடக்கு அச் சம்பட்டி ஆகிய பகுதிகளில் பேசு கிறார். மார்ச் 9, 10, 11 ஆகிய தேதிகளில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ். சைலஜா, மாவட்டக் குழு உறுப்பினர் கே.ஏ.மல்லிகா மற்றும் செண்பகம், அற்புத மேரி ஆகியோர் தலைமை யில் பெண்கள் குழு தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, ஆர்.கிருஷ்ணன் ம.ராஜாங் கம், பி.தியாகராஜன், தி.கண பதி, ஆர்.மோகன், மாவட் டக்குழு உறுப்பினர்கள், ஸ்ரீராம், பிரபு, சி.முத்து குமாரசாமி, பால்ராஜ், வேலுமயில் ஆகியோர் பிரச்சாரத்தில் பங்கேற்கின் றனர்.
போக்குவரத்து கமிட்டி சார்பில் பி.மனோகரன், எஸ்.பெருமாள் ஆகியோ ரது தலைமையில் மார்ச் 14 அன்று வீடு வீடாகச்சென்று வாக்கு சேகரிப்பு நடை பெறுகிறது. மின் அரங்க கமிட்டி சார்பில் எஸ்.முத்து குமாரசாமி, எஸ்.வண்ண முத்து ஆகியோரது தலை மையில் மார்ச் 11 அன்று வாக்கு சேகரிப்பு நடை பெறுகிறது.
கலைக்குழுக்கள்
தாமிரபரணி நாடக குழு, புதுகை பூபாளம், கரி சல் கலைக்குழுக்களின் பிரச் சாரமும் தொகுதி முழு வதும் நடைபெற உள்ளது. தொகுதி முழுவதும் கட்சி கிளைகள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது. மாணவர் சங்கம் சார்பில் பேச்சி முத்து, மகேஷ், அசோக் ஆகியோரது தலை மையில் மாணவர்கள் சங் கரன் கோவில் தொகுதியில் வீடு,வீடாக சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட வுள்ளனர்.கே.ஜி.பாஸ்கரன், வீ. பழனி, ஆர்.கிருஷ்ணன், ஸ்ரீராம், பிரபு, நல்லசாமி, முத்துபாண்டியன், மாட சாமி, திருவுடையான், கருப் பசாமி, லெட்சுமி, நாரா யணன், கருப்பையா, பாலுச் சாமி, எம்.பி.எஸ்.மணி, ரத் தினவேல், மகேஷ், அசோக், ஆனந்த், கிருஷ்ணமூர்த்தி, குருசாமி மற்றும் கட்சி கிளைச் செயலாளர்களை உள்ளடக்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட் டுள்ளது. முத்துபாண்டியன் கன்வீனராக தேர்தல் பணி களை ஒருங்கிணைத்து வரு கிறார். மேற்கண்ட தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் கே.ஜி.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.