பெரம்பூர், மார்ச். 6 -கொடுங்கையூர் வெங்க டேஸ்வரா நகர் 1-வது தெரு வில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. 200 ஆண்டு கள் பழமை வாய்ந்த இந்த கோவில் தற்போது புனர மைக்கப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது. கோவிலில் நவக்கிரக சன் னதி அமைக்கப்படுகிறது. திங்களன்று பணி முடிந்து ஊழியர்கள் சென்று விட்டனர். கோவில் அர்ச்ச கரும் பூஜையை முடித்து கோவிலை பூட்டிச் சென்று விட்டார். செவ்வாயன்று காலை அர்ச்சகர் சுப்பிர மணி, நிர்வாகி கணேசன் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். அப்போது இரும்பு கேட் பூட்டு உடைக்கப் பட்டு இருந்தது. மேலும் விநாயகருக்கு எதிரே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.அதிர்ச்சி அடைந்தவர் கள் கொடுங்கையூர் காவல் துறையில் புகார் செய்தார். கோவில் உண்டியல் 4 மாத மாக திறக்கப்படவில்லை. இதனால் ரூ.8 ஆயிரம் வரை கொள்ளை போய் இருக்க லாம் என கருதப்படுகிறது. காவல் உதவி ஆணையர் கோ.வி. மனோகரன், ஆய்வா ளர் சிவசங்கரன் ஆகியோர் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply