ரோம், மார்ச் 6 –
இத்தாலி அரசின் மக் கள் விரோதக் கொள்கை களுக்கு எதிராக மூன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டங் களும், பேரணிகளும் நடந் துள்ளன. நாடு முழுவதும் தொழி லாளர்கள் ஆர்ப்பாட்டங் களை நடத்திய காலை வேளையில், கட்டுமானத் துறையைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் ரோம் நகர வீதிகளில் வலம் வந்தனர். தற்போதைய அர சின் கொள்கைகள் இத்தாலி யின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கட்டு மானத்துறையில் கடுமை யான நெருக்கடியை ஏற்ப டுத்தி விட்டது. ஏராளமான தொழிலாளர்கள் வேலை களை இழந்திருக்கிறார்கள். தொழிலாளர்களின் நலன்க ளை பிரதமர் மான்டி புறக் கணிக்கிறார் என்ற குற்றச் சாட்டுகளுடன் ஆயிரக் கணக்கான தொழிலாளர் கள் பேரணியில் பங்கேற் றனர்.
இந்தப் பேரணி நிறைவு பெற்ற பிறகு மதிய வேளை யில் பிரான்ஸ் மற்றும் இத் தாலி ஆகிய இரு நாடுகளுக் கிடையில் அமைக்கப்பட்டு வரும் அதிவிரைவு ரயில் பாதைக்கு எதிர்ப்பு தெரி வித்து ஆயிரக்கணக்கான மக்கள் ரோம் நகரின் கிழக் குப்பகுதியில் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தி னர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து வெளி யேற்றப்பட்டுள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளதைக் கண்டித்தே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணி நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் சுமார் பத்தாயிரம் பேர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். நாட்டின் பொருளாதாரத் தை மேம்படுத்தாமல் மக் கள் பணத்தை விரயம் செய்து கொண்டிருப்பதைக் கண்டித்தே அவர்கள் முழக் கம் எழுப்பினர். பெரும் நிதி நிறுவனங்களின் நலன்க ளை மட்டுமே பிரதமர் முன் னிறுத்துகிறார் என்று பேர ணியில் பேசிய தலைவர் ஒருவர் குற்றம் சாட்டினார்.
மக்கள் அதிருப்தி அதிக ரித்து வரும் நிலையில், பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் நல்ல முடிவை எடுத்துள்ள னர் என்று நிலைமை தெரி யாமல் இத்தாலி பிரதமர் மான்டி பேசிக் கொண்டி ருக்கிறார். இத்தாலியின் வேலையின்மை விகிதம் 9.2 விழுக்காட்டைத் தொட்டு விட்டது. இது மேலும் அதி கரிக்கும் என்ற ஆபத்து உள்ள நிலையில், நெருக் கடிக்குக் காரணமான கொள்கைகளைத் தீவிரப் படுத்தும் முயற்சியில் இத் தாலி அரசு இருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.