புவனேஸ்வர், மார்ச் 6-
ஒடிசா புரி மாவட்டம் பிலிப்லி பகுதியில் தலித் பெண் பாலியல் பலாத்கா ரம் செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட் டில் தொடர்புள்ள ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி (பிஜேடி) சட்டமன்ற உறுப் பினரும், முன்னாள் அமைச்சருமான பிரதீப் மகாரதியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட் டோர் ஆணையத்தலைவர் புனியா வலியுறுத்தினார்.ஒடிசா தலைநகர் புவ னேஸ்வரில் அவர் செய்தியா ளர்களிடம் திங்கட்கிழமை பேசுகையில், தலித்பெண் பாலியல் பலாத்காரத்தில் முக்கிய குற்றவாளியாக கரு தப்படுகிற நபர் மகாரதி, பண் ணை வீட்டில் கைது செய் யப்பட்டுள்ளார். அந்த நப ருக்கு முன்னாள் அமைச்சர் அடைக்கலம் தந்துள்ளார். எனவே, மகாரதி மீது எப்ஐ ஆர் பதிவு செய்து, சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றார்.ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர நிகழ்வில் தனது பெயர், தொடர்புப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மகாரதி அமைச்சர் பதவியை ராஜி னாமா செய்தார்.
அவர் பிலிப்லி சட்டசபைத் தொகுதி உறுப்பினராக உள்ளார்.பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணி டம் அவமரியாதை செய்த பிலிப்லி காவல் நிலைய பொறுப்பு அதிகாரியையும் மருத்துவர்களையும் தங்கள் பணிகளில், புறக்கணிப்பு செய்ததற்காக கைது செய்ய வேண்டும் என்றும், ஆணையத்தலைவர் வலியு றுத்தினார். இதற்கிடையே, புனியாவின் கோரிக்கைக்கு, ஒடிசா மருத்துவ சேவை சங் கமும், ஒடிசா காவல்துறை யினர் சங்கமும் கடுமையாக பதில் அளித்துள்ளன. புனி யா, கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை எடுத் தால் மாநிலம் தழுவிய போராட்டத்தை மேற் கொள்ளப்போவதாக அவை எச்சரித்தன.

Leave A Reply

%d bloggers like this: