புதுக்கோட்டை, மார்ச் 6-
அரசு உத்தரவுப்படி தங் களுக்கு திருத்திய ஊதியம் வழங்க வேண்டுமென வலி யுறுத்தி கிராம ஊராட்சி களில் பணியாற்றும் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்கு எநர்கள் (ஓஎச்டி) திங்களன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர்.போராட்டத்தையொட்டி நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் திருத்திய ஊதியம் வழங்க வேண்டுமென அனைத்து வட் டார வளர்ச்சி அலுவலகங் களுக்கும் மாவட்ட ஆட்சிய ரின் மூலமாகவும் சுற்றறிக்கை மூலமாகவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்களுக்கு 1.1.2006 முதல் அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; ஆறு மாதத் திற்கு ஒரு முறைரூ.40ஊக்கத் தொகைகளை வழங்க வேண் டும்; அரசாணைப்படி 1.4.1992 முதல் வழங்க வேண்டிய அக விலைப்படி நிலுவைத் தொகை யை உடனடியாக வழங்க வேண்டும்; தொட்டியை சுத்தம் செய்ய ரூ.300 வழங்க வேண் டும்; மாதம் ரூ.250 சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண் டும்; பணிநிரந்தரம், ஓய்வூதி யம், பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு கிராம பஞ்சா யத்து இணைப்புக்குழு (சிஐ டியு)வின் சார்பில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத் திற்கு அதன் மாநிலத் தலை வர் ப.சண்முகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், துணைச் செயலாளர் கே.முக மதலிஜின்னா, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவிச்சந் திரன், செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித் தனர்.போராட்டத்தையொட்டி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை யைத் தொடர்ந்து மாவட்ட ஆட் சியர் மூலமாக அனைத்து வட் டார வளர்ச்சி அலுவலர்களுக் கும் உடனடியாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில் புதுக்கோட்டை மாவட்டத்தி லுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற் றும் துப்புரவுப் பணியாளர் களுக்கு வட்டார வளர்ச்சி அலு வலர் (கிராம ஊராட்சி) செயல் முறைகளின்படி 30.6.2009 ல் திருத்திய ஊதியம் நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள் ளது.எனவே, 30.06.2009ல் ரூ.1390, 01.01.2010ல் ரூ.1430, 1.7.210ல் ரூ.1470 ஆகிய திருத் திய ஊதியங்களின் நிலுவைத் தொகைகளையும், ஆறாவது ஊதியக்குழு நிலுவைத் தொகை யினையும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் ஊக் கத் தொகை ரூ.40ம் வழங்க வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டு மென அறிவுறுத்தப்பட்டுள்ளது.நிலுவைத் தொகைகளை நிதிநிலைக்கேற்ப மூன்று தவ ணைகளில் வழங்க ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு உத் தரவு வழங்க வேண்டுமென் றும் வட்டார வளர்ச்சி அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. மேலும், 15 தினங் களுக்குள் (18.3.2012) முதல் தவணையை வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டு என் றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்ற றிக்கையின் நகல் சங்கத்தின் தலைவர்களுக்கும் வழங்கப் பட்டது.

Leave A Reply