பொள்ளாச்சி, மார்ச் 6-பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை எட்டிதுறை பகுதியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கிளை அமைப்பு கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வி.ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொள்ளாச்சி பகுதி பொறுப்பாளர் துரைசாமி, இந்திய வாலிபர் சங்கத்தின் தாலுகா செயலாளர் வி.எஸ்.பரமசிவம் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் எட்டிதுறை பகுதியில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் கிளை டி.வெள்ளிங்கிரி செயலாளராக கொண்டு துவக்கப்பட்டது. இதில் பொன்னாலம்மன்துறை ஆற்றுப் பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும். மலைவாழ் மக்களுக்கு சாதிச்சான்றிதழ், நலவாரிய அட்டை வழங்கிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.