டிலக்னோ, மார்ச் 6-காங்கிரஸ் கட்சியின் வருங்காலத் தலைவர், நாளைக்கே பிரதமர் பதவி கிடைத்தாலும் ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படக் கூடியவர், அலெக்சாண்டர் போல் பிரமாதமான தலைவர் என்றெல் லாம் காங்கிரஸாரால் கோஷ்டி கானம் பாடப்பட்டு வரும் ராகுல் காந்திக்கு ஐந்து மாநிலத் தேர்தலில் மீண்டும் ஒரு பெரும் தோல்வி கிடைத்துள்ளது.
அவரது உத்திகளுக்குக் கிடைத்த பெரும் அடியாக இது கருதப்படுகிறது.அதிலும் உத்தரப்பிரதேசத்தில், தான் எம்.பியாக உள்ள அமேதி தொகுதிக்குட் பட்ட அத்தனை சட்டசபைத் தொகுதிக ளையும் அவரது கட்சி, சமாஜ்வாதியிடம் பறி கொடுத்திருப்பதுதான் அவருக்குப் பேரதிர்ச்சி. இது காங்கிரஸை நடுநடுங்க வைத்துள்ளது.பீகார் சட்டசபைத் தேர்தலில் காங் கிரஸ் வாங்கிய மரண அடியை இன்னும் அக்கட்சியினர் மறந்திருக்க முடியாது. அதேபோல ஒரிசாவிலும் ராகுல் காந்தி யின் உத்திகளுக்கு பலத்த அடி கிடைத்தது. தமிழகத்திலும் ராகுல் காந்தியின் அணுகு முறைகள் கடந்த சட்டசபைத் தேர்தலின் போது மோசமான தோல்வியையே தழு வியது.
தமது கட்சி தலைமையிலான மன் மோகன்சிங் அரசின் நாசகரக் கொள்கை களால் ஒட்டுமொத்த நாடும் கடும் துயரத் தில் ஆழ்ந்துள்ளது.கொள்கைகளை மாற் றாமல் ராகுலைக் காட்டி வாக்குக் கேட்ட காங்கிரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்.இப்போது உ.பியிலும், பஞ்சாபிலும், கோவாவிலும் காங்கிரஸ் வாங்கியுள்ள அடி, இந்த மாநில மக்களும் ராகுல் காந் தியை ஏற்கவில்லை என்பதையே வெளிச் சம் போட்டுக் காட்டுகிறது.குறிப்பாக உ.பியில் ராகுல் காந்தியின் அணுகுமுறை மிகப் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சி வெல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பல தொகுதிகளையும் அந்தக் கட்சி நழுவ விட்டுள்ளது. முலாயம் சிங் யாதவையும், மாயாவதியையும் தேர்தல் பிரச்சாரத் தின்போது கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார் ராகுல் காந்தி. தேர்தல் பிரச்சாரத் தின்போது அவர் அடித்த ‘ஸ்டண்ட் டை’ப் பார்த்தபோது அனைவருமே வியந்து போயிருந்தனர். காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெற்று விடுமோ என்று கூட கார்ப்பரேட் ஊடகங்கள் கதைத்தன.
ராகுல் காந்திக்கு உதவி புரிய சகோதரி பிரியங்கா காந்தி, தனது கணவருடன் உ.பி யில் முகாமிட்டு ஊர் ஊராகப் போய் வந் தார். ஆனாலும், தனது அமேதி தொகுதி யில் ஒரு சட்டசபைத் தொகுதியில் கூட அவரால் காங்கிரஸை வெற்றி பெற வைக்க முடியவில்லை.
அமேதி எம்.பி. தொகுதிக் குட்பட்ட 6 சட்டசபைத் தொகுதிகளை யும் சமாஜ்வாதி பிடித்துவிட்டது. உ.பியைப் போலவே பஞ்சாபிலும் காங் கிரஸ் மண்ணைக் கவ்வியுள்ளது. கோவா வில் ஆட்சியை பாஜகவிடம் பறி கொடுத்து விட்டது. மணிப்பூரை மட் டுமே தக்க வைத்துள்ளது. அந்த மாநில முதல்வர் இபோபிசிங்கின் தனிப்பட்ட செல் வாக்குதான் காரணமே தவிர, காங்கிரஸின் செல்வாக்கு அல்ல.உ.பியில் கடந்த முறை வாங்கியதை விட சில இடங்களை கூடுதலாகப் பெற் றுள்ளது காங்கிரஸ். உத்தரகாண்ட்டில் கூட பாஜகவிடமிருந்து ஆட்சியை இன் னும் அது முழுமையாக பறிக்கவில்லை, இழுபறிதான் காணப்படுகிறது. மொத்தத் தில் ஐந்து மாநில பொதுத் தேர்தல் ராகுல் காந்திக்கு மட்டுமல்லாமல், காங்கிரசுக்கும் பெருத்த அடியே.
குர்ஷித் பேட்டி
உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவை ஆய்வுசெய்ய கால அவகாசம் தேவை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரம் நன்றாக இருந்தது. ஆனால் முடிவுதான் வேறுவகையில் அமைந்துவிட்டது. இதுகுறித்து உடனடி யாக எந்த முடிவுக்கும் வர முடியாது. அதற்கு சிறிது அவகாசம் தேவை என்று கூறினார்.
காங்கிரசுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலை: சுஷ்மா
உ.பி.யில் வாக்கு எண்ணிக்கை துவங் கியதும் இரண்டாவது இடத்தில் பாஜக இருந்தது. இதை அடுத்து தன் மகிழ்ச்சியை அக்கட்சி பரவலாகத் தெரிவித்தது. நேரம் செல்லச் செல்ல, சமாஜ்வாதிக்கு அடுத்து பகுஜன் சமாஜ் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பாஜக வின் நாடாளுமன்றத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இந்தத் தேர்தல் முடிவுகள் தங்கள் கட்சிக்கு மகிழ்ச்சியை அளிப்ப தாகத் தெரிவித்தார். அதே நேரம், நாடு முழு வதும் காங்கிரஸூக்கு எதிரான போக்கு தென்படுவதாகவும் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: