சென்னை சிறுத்தைகள் அணி தில்லி விஸார்ட்ஸ் அணியை 5-2 என்ற கோல்களில் தோற்கடித்தது. பெங்களூரில் நடந்த சுழல் போட்டியில் போபால் பாதுஷா அணி 3-1 என்ற கோல்களில் கர்நாடகா சிங்கங்களை வென்றது.புதுதில் மேஜர் தயாள் சந்த் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் சென்னை சிறுத்தைகள் அணி, இரண்டாவது சுழல் போட்டியை வென்றது. விஸார்ட்ஸ் அணி முதல் பாதியில் சிறப்பாக ஆடியது. ஜெர்மன் வீரர் பிலிப் சன்கெல் (32, 49ம் நிமிடம்) இரண்டு கோல்களை அடித்தார். இரண்டுமே களக் கோல்களாகும். முதல்பாதி முடியும் நேரத்தில் சிறுத்தைகளின் ஜோசப் ரியர்டன் ஒரு கோல் அடித்து இடைவெளியை ஒன்றாகக் குறைத்தார்.இரண்டாம் பாதியில் சென்னை அணி உறுதியுடன் திடமாக வேகமாக ஆடியது. அதன் பலனாக 47 மற்றும் 51ம் நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர்களை சிறுத்தைகளின் பாகிஸ்தான் வீரர் வர்சி இரண்டு கோல்களை அடித்தார். சிங்ளேர் (55 நி) சந்தீப் அண்டில் (60 நி) ஆகியோரும் கோல்களை அடித்து சென்னை அணியை 5-2 என வெற்றிபெற வைத்தனர்.பெங்களூரில் நடந்த போட்டியில் கர்நாடகா அணி சொதப்பியது. முதல்பாதியில் இரு அணிகளுமே கோல்களை அடிக்கத் தடுமாறியது. முதல் பாதியில் ஸ்கோர் போர்டு 0-0 என இருந்தது. 41 வது நிமிடத்தில் கர்நாடகாவின் தன்ராஜ்பிள்ளை கோல் அடித்தார். 43ம் நிமிடத்தில் பாதுஷா அணியின் கரண் பாஸ்கரன் ஒருகளக்கோல் அடித்து சமன் செய்தார். 45ம் நிமிடத்தில் அவர் தனது இரண்டாம் கோலை அடித்தார். 48ம் நிமிடத்தில் போபால் பாதுஷா அணியின் சமீர்டாட் அடித்த கோல் பாதுஷா அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது.

Leave A Reply

%d bloggers like this: