ஈரோடு, மார்ச் 6-
ஈரோடு மஞ்சள் மார்க் கெட்டில் நேற்று நடந்த ஏலத்துக்கு 17 ஆயிரம் மூட்டை மஞ்சள் வந்தது. மஞ்சள் கிடங்கு உரிமை யாளர் சங்கம் மற்றும் விற் பனையாளர் சங்கத்தலைவர் ரவிசங்கர் கூறியதாவது: விரலி ரகம் குவின்டா லுக்கு அதிகபட்சமாக ரூ. 3891ம், குறைந்தபட்சம் ரூ. 2534 வீதமும், கிழங்கு ரகம் அதிகபட்சம் ரூ. 3689க்கும், குறைந்தபட்சம் ரூ. 2419 க்கும் விலைபோனது. வெளி மார்க்கட்டில் விரலி அதிக பட்சம் ரூ. 4049க்கும், கிழங்கு ரகம் அதிகபட்சமாக ரூ. 4007க்கும் விற்றது. இந்த விலை கடந்த வார த்தை விட குவின்டாலுக்கு ரூ. 300 முதல் ரூ. 500 வரை குறைவு. செவ்வாயன்று (மார்ச் 6) மஞ்சள் மார்க்கெட்டை பொருத்த வரை ஆந்திரா மாநிலம் நிஜ மாதாபாத், மகாராஷ்டிரா சாங்கிலி, தமிழகத்தில் சேலம், ஆத் தூர், ராசிபுரம் மார்க்கெட் டிலும் மஞ்சள் வரத்து அதிக மானதால் தான் விலை இந்தளவு வீழ்ச்சியடைந் துள்ளது.

Leave A Reply