அம்பத்தூர், மார்ச், 6 -கடந்த மாதம் 25ம் தேதி ஆவடி நகராட்சி அலுவ லகத்தில், பன்றி வளர்க்கும் உரிமையாளர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டது. அதில் நகராட்சிப் பகுதிக ளில் பன்றிகள் வளர்க்கக் கூடாது என வலியுறுத்தப் பட்டது. மேலும் தெருக்களில் நடமாடும் பன்றிகளை நகராட்சி நிர்வாகத்தினர் பிடித்து அப்புறப்படுத்தப்படு வதோடு, சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட் டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.மேலும் பன்றி வளர்க்கும் உரிமையாளர்களுக்கு இம்மாதம் 2ம் தேதி பன்றிகளை நகராட்சி எல்லைக்கு அப்பால் அப்புறப்படுத்த வேண்டும் என பொது சுகாதார சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஆனாலும் தொடர்ந்து பன்றிகளின் நடமாட்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காணப்பட்டதால், அப்பு டாக் அண்ட் பிக் கேட்சர் என்ற நிறுவனத்தா ரால் ஆவடி நகராட்சிப் பகுதியான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் திருமுல்லைவாயல் பகுதிகளில் சுமார் 130 பன்றிகள் பிடித்து அப்புறப்படுத் தப்பட்டன. மேலும் இனிவரும் காலங்களில் நகராட்சி எல்லைக்குள் பன்றிகளை வளர்த்தால் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நகராட்சி நிர்வாகத்தால் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தப்படுவதோடு, இந்திய தண்ட னைச் சட்டம் பிரிவு எண். 268, 270, 271 மற்றும் 278ன் கீழ் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நகராட்சிப் பகுதிகளில் பன்றிகள் சுற்றித் திரிகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சென்னை, மார்ச், 6 -டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த தொலைத்தொடர்பு பிராண்டட்டான டாடா டோகோமோ, சென்னையில் உள்ள தனது ஃபோட்டான் மேக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு இன் னொரு அன்லிமிடெட் திட்டத்தை அறிவித்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ், டாடா டோகோமோ ஃபோட்டான் மேக்ஸ்-ன் தற்போதைய மற்றும் புதிய போஸ்ட்-பே வாடிக்கையாளர்களுக்கு மாதந்தோறும் கட்டணமாக ரூ.1000 மட்டும் வசூலிக்கப்படும். இதில் 3 ஜிபி வரையிலான டேட்டாக்களை அவர்கள் 6.2 எம்பி பீஎஸ் வேகத்திலும், அதன் பின்னர் 153.6 கேபிபீஎஸ் வேகத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.எங்களது வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும். சென்னையில் உள்ள டாடா டோகோமோ ஃபோட்டான் மேக்ஸ் வாடிக் கையாளர்களுக்கு அதிகபட்ச புத்துணர்ச்சியான அனுப வத்தை அளிக்கும் திட்டத்தின் விரிவாக்கமாகும் என்று டாடா டெலிசர்வீசஸ் லிமிடெட் தமிழ்நாடு வட்டத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ராஜன் குப்தா கூறினார். மேலும் விவரங்கள் பெற தொடர்புக்கு : மது சூதனன், எடில்மேன் இந்தியா பிரைவேட் லிமிடெட், 98401 80356. அயனாரளரனாயயேn.க்ஷ@நனநடஅயn.உடிஅ.எஸ்.பி.ஐ கார்டு: இரண்டு புதிய சலுகைகள்சென்னை, மார்ச், 6 -இந்தியாவில் முன்னணி கிரடிட் கார்டு நிறுவனமான எஸ்.பி.ஐ கார்டு மற்றும் பண பறிமாற்ற சேவை நிறுவனம் இரண்டு புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.ஒன்று வாடிக்கையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் திட்டம். அதாவது எஸ்.பி.ஐ கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எவரேனும் ஒரு நபரை அல்லது பல நபர்களிடம் இந்த கார்டு திட்டத்தில் சேர்த்து விட்டால் அந்த வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும். ஒவ்வொரு வாடிக்கையாளர் இணைப்பும் ரொக்கப்பரிசை கொண்டதாக இருக்கும்.இரண்டாவது முயற்சி என்னவென்றால் இந்த எஸ்.பி.ஐ கார்டு வாங்க வருமான சான்றிதழ் தாக்கல் செய்யத் தேவையில்லை. இதனால் வாழ்க்கையை மேலும் எளிதாக்கியுள்ளோம் என்று எஸ்.பி.ஐ கார்டு சேவை நிறுவன தலைமை செயல் அதிகாரி கடாம்பி நரஹரி கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: