நாமக்கல், மார்ச் 6-நாமக்கல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில்புற நோயாளிகள் பிரிவு மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் காவல் குடியிருப்பில் புற நோயாளிகள் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் அரசாணை பிறப்பித்துள்ளார். அதன்படி நாமக்கல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் மருத்துவப் பிரிவு திங்களன்று துவங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் துணை இயக்குநர் பி.லட்சுமி முன்னிலையில் காவல் கண்காணிப்பாளர் சத்தியப்பிரியா மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதன் மூலம் காவலர் குடியிருப்பின் உள்ள குடும்பத்தினர், குழந்தைகள் உள்ளிட்டோர் தேவையான மருத்துவ வசதிகள் பெற முடியும் என விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply