ஆந்திராவில் நிலவி வரும் கடும் மின்வெட்டைக் கண்டித்துப் பேசிய தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை தொழிலாளர் துறை அமைச்சர் தனம் நாகேந்தர் வெளிப் படையாக மிரட்டினார். இதனால் எதிர்க் கட்சியினர் ஆத்திரமடைந்தனர்.
தனம் நாகேந்தரின் பேச்சைக் கண்டித்த முதல்வர் என். கிரண்குமார் ரெட்டி, அவ ரது பேச்சுகளை அவைக்குறிப்புகளி லிருந்து நீக்குமாறு உத்தரவிட்டார்.தெலுங்குதேசம் உறுப்பினர் ஏ. ரேவந்த் ரெட்டி, அமைச்சர் தனம் நாகேந்தர் குறித்து தனிப்பட்ட கருத்துகளைத் தெரி வித்ததால் ஆத்திரமடைந்த அமைச்சர், பொறுமையை இழந்தார். முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினரின் பேச்சின்போது சம்பந்த மில்லாமல் தொழிலாளர் துறை அமைச் சர் குறுக்கிட்டார். இதையடுத்து ரேவந்த் ரெட்டி திருப்பித்தாக்கினார். அமைச்சர் நாகேந்தரின் நாகரிகமற்ற பேச்சு, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திர பாபுவை ஆத்திரமடையச் செய்தது.
அமைச்சரின் மோசமான பேச்சு மிகவும் அசம்பாவிதமானதாகும். சட்ட சபையிலேயே அமைச்சர் ஒருவர், உறுப் பினரை மிரட்டுகிறார். சபாநாயகர் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். இது குறித்து முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். அமைச்சரின் பேச்சைக் கண்டித்து தெலுங்குதேசம் கட்சியினர் சபாநாய கரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அமைச்சர் உணர்ச்சிவசப்பட்டு பேசி யது தவறு என்று தெரிவித்த முதல்வர் கிரண் குமார் ரெட்டி, அமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கு மாறு சபாநாயகரைக் கேட்டுக் கொண் டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.