“இத்தகைய பயணிகளின் மூலமாக ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் இதர அபாயகரமான பொருட்களும் கொண்டு செல்லப்படுவதற்கான வாய்ப்பு சாதாரண பயணிகளை விடவும் அதிகம் என்பதும், அத னால் இந்தப் பயணிகளைக் கவனமுடன் சோதனை செய்ய வேண்டிய தேவை உள் ளது என்பதும் சோதனையாளர்களுக்கு முழு மையாகச் சொல்லப்பட வேண்டும்.”-
விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் துறை (பிசிஏஎஸ்) பிறப்பித்துள்ள பாதுகாப்பு சோதனை ஆணைகளில் ஒன்று இது.-இத்தகைய பயணிகள் என்று எத்த கைய பயணிகளைச் சொல்கிறார்கள் தெரி யுமா? தாங்களாக நடந்துவர இயலாத பயணி களை, அதாவது மாற்றுத் திறனாளிகளை!இப்படி ஒரு விதி இருப்பதால்தான் விமான நிலையங்களில் சில விமான நிறு வனங்களால் மாற்றுத்திறனாளிகள் அடிக் கடி அவமதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இந்த விதியே அவர்களை அவமதிப்பதாக இருக்கிறது என்கிறபோது, இதைச் செயல் படுத்துகிற அதிகாரிகள் அவமதிக்க மாட் டார்களா என்ன?அதிகாரிகள் இவர்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டியதில்லை என்றே இன்னொரு ஆணை கூறுகிறது:
“விமானத் தில் ஏறுகிற இறங்குகிற செயல்பட இயலாத/ஊனமுற்ற/நோய்வாய்ப்பட்ட பயணிகளிடம் சோதனை மேற்கொள்வதில் பரிவு காட்டுவ தற்கு இடமில்லை. மாறாக, மிகவும் எச்சரிக் கையாகவும் விழிப்புடனும் இருந்தாக வேண் டும் என்பதற்குப் போதுமான காரணம் இருக் கிறது,” என்று அந்த ஆணை கூறுகிறது.இந்தப் பின்னணியில்தான் அண்மை யில் வெளியான இரண்டு செய்திகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்திய முடக்கு வாத ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவுத் தலைவராக இருப்பவர் ஜீஜா கோஷ். அண்மையில் இவர் கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு தனியார் விமானத்தி லிருந்து இறக்கிவிடப்பட்டார். பெருமூளை சார்ந்த முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவ ரான அவருக்கு விமானத்தில் பயணம் செய் யும் உடல் தகுதி இல்லை என்பதாக விளக் கம் அளிக்கப்பட்டது.புகழ்பெற்ற நடனக் கலைஞரான சுதா சந்திரன் கடந்த வாரம் இதே போன்ற அனு பவத்திற்கு உள்ளானார். விபத்தில் ஒரு காலை இழந்தவரான அவர், செயற்கைக் கால் பொருத்திக் கொண்டு, அதனுடனேயே தொடர்ந்து ஆடி திரைப்பட நட்சத்திரமாக வும் வளர்ந்தவர். ஆனால், திருவனந்தபுரம் விமானநிலையத்தில் அவர் தனது சல்வால் கமீஸ் ஆடையை அகற்றி, செயற்கைக் காலைக் கழற்றிக் காட்டுமாறு நிர்ப்பந்திக் கப்பட்டார்.]
சில நாட்களுக்கு முன் மும்பை விமான நிலையத்திலும் இதே போன்று நடத் தப்பட்டார்.ஆஞ்ஜிலீ அகர்வால், மாற்றுத்திறனாளி யர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர். நான்கு நாட்களுக்கு முன் அவர் மும்பை விமான நிலையத்தில் வந்து இறங் கியபோது, அவர் வெளியே வருவதற்கான சக்கர நாற்காலி கிடைக்கவில்லை. வெகு நேரமாக முயன்றும் அதிகாரிகள் எந்த ஏற் பாடும் செய்யாத நிலையில் அவர், சரக்கு களைக் கொண்டுவருவதற்கான தள்ளு வண்டியில் சமாளித்து வெளியே வந்திருக் கிறார்.மக்களுக்கு அறிமுகமானவர்களே இது போன்ற அவமதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்றால், ஊடக வெளிச் சம் கிடைக்கப் பெறாத எத்தனையோ மாற் றுத் திறனாளிகளுக்கு விமான நிலையங் களில் எத்தகைய மரியாதை கிடைக்கும்? இதை நியாயப்படுத்துவதற்குக் கூறப்படுகிற ஒரே காரணம்: பாதுகாப்பு.“பாதுகாப்பு முக்கியம், அதற்காக மற்ற பயணிகளைப் போலவே எங்களையும் சோத னைக்கு உட்படுத்துவதை நாங்கள் எதிர்க்க வில்லை. ஆனால் சுயமாக எழ முடியாத எங் களை நிற்கச் சொல்வதும், எங்களுடைய எளி தான பயன்பாட்டிற்கென்றே வடிவமைக்கப் பட்ட சக்கர நாற்காலிகளிலிருந்து எழுப்பி விமான நிலையத்தின் வழக்கமான, மிக இடைஞ்சலான, அறிவியல்பூர்வமாக வடிவ மைக்கப்படாத சக்கர நாற்காலிகளில் அமரு மாறு கட்டாயப்படுத்துவதும் அநியாயம் இல்லையா?” இவ்வாறு மாற்றுத்திறனா ளிகள் கேட்பதில் முழு நியாயம் இருக்கிறது.உலகின் பல நாடுகளில் மாற்றுத்திற னாளிகள் இடையூறின்றி விமானத்திற்குச் செல்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப் பட்ட சோதனை அமைப்புகள் நிறுவப்பட்டுள் ளன.
எதற்கெடுத்தாலும் உலக நிலவரத்தைக் காரணம் காட்டும் இந்திய ஆட்சியாளர்கள் – அதிகார வர்க்கத்தின் மண்டையில் இது ஏன் உறைக்கவில்லை?உலகில் மனித உரிமை மீறல்கள் பல விதம். அதில் இங்குள்ள மீறல்களோ தனி ரகம். மக்களின் மனசாட்சியும் ஆவேசமும் தான் மாற்றுத்திறனாளிகளின் உரிமையை யும் மரியாதையையும் ஈட்டித்தரும்.

Leave a Reply

You must be logged in to post a comment.