வாஷிங்டன், மார்ச் 6 –
ஈரானைப் பெரிய ஆபத் தான நாடாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அமெரிக் காவும், இஸ்ரேலும்தான் பெரிய தீய சக்திகள் என்று அமெரிக்க அறிஞர் நோம் சாம்ஸ்கி கருத்து தெரிவித் துள்ளார்.உலக அமைதியை ஈரான் கெடுக்கிறது என்ற இரு நாடுகளின் குற்றச்சாட் டை அவர் மறுக்கிறார். இது பற்றி அவர் கட்டுரை யொன்றை எழுதியுள்ளார். இந்த ஆபத்து பற்றி எந்த விதமான நம்பத்தகுந்த விவா தமும் நடைபெறவில்லை. இத் தனைக்கும் இது குறித்து அமெரிக்க ராணுவம் மற் றும் உளவுத்துறைகள் தெளிவான பதிலை வைத் துள்ளன. ராணுவ ரீதியில் ஆபத்தான நாடாக ஈரான் இல்லை என்றுதான் அந்தப் பதில் விளக்குகிறது.பெரும்பாலான அமெ ரிக்கக் குடிமக்கள்கூட, அமைதிப் பணிக்காக அணு சக்தியை ஈரான் பயன்படுத் திக் கொள்வதை ஆதரிக்கின் றனர். ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட 120 அணிசேரா நாடுகள் அமெ ரிக்காவின் ஈரான் கொள் கையை இப்போதும் ஆத ரிக்கவில்லை.
அரபு நாட்டு சர்வாதிகாரிகளில் பலர் ஈரானுக்கு எதிராக அமெரிக் காவை ஆதரிக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த நாடு களின் பெரும்பாலான மக் கள் இதை ஆதரிக்கவில்லை. உலக அமைதிக்கு இஸ் ரேல்தான் பெரிய ஆபத்து என்று ஐரோப்பியர்கள் கருதுகிறார்கள். மேற்கு ஆசியாவில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேல் தான்.
இதுவரை 200 அணு குண்டுகள் தயாரித்து வைத் திருப்பதாகக் கூறப்படுகி றது. அணு ஆயுதப்பரவல் தடைச்சட்டத்தில் கையெ ழுத்திட முடியாது என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. சர்வதேச அணுசக்திக்கழக ஆய்வா ளர்கள் சோதனையிடுவதை யும் இஸ்ரேல் அனுமதிப்ப தில்லை.இவ்வாறு சாம்ஸ்கி தனது கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: