அதிக அளவில் விட்டமின்-இ எடுத்துக் கொண்டால் பாதகமான விளைவுகளே இருக்கும் என்று ஜப்பானிய ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து ஆய்வு செய்த ஆய்வாளர்கள், பொதுவாக விட்டமின்கள் எலும்புகளை வலுப்படுத்தக்கூடியவையாகும். ஆனால், விட்டமின்-இ தேவை என்பதற்காக அதிக அளவில் மருந்துகள், மாத்திரைகள் மூலம் எடுத்துக் கொண்டால் எலும்புகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று கூறுகிறார்கள். எலும்பு வளர்ச்சிக்கு விட்டமின் இ உதவும் என்று தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். இதனால் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போக்கு அதிகரித்தது. இதை ஆய்வு செய்துதான் அதிக அளவு எடுத்துக் கொள்ளாதீர்கள் என்ற அறிவுரையைச் செய்ய வேண்டிய நிலைக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.