புதுதில்லி, மார்ச் 5 –
5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு செவ் வாய்க்கிழமை (மார்ச் 6) வெளியாகிறது.உத்தரப்பிரதேசம் (403), பஞ்சாப் (117 தொகுதி), உத்தர் காண்ட் (70), மணிப்பூர் (60), கோவா(40 தொகுதி) ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடந்துள்ளது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்திற்கு கடைசி 7வது கட்டத் தேர் தல் முடிவடைந்த நிலை யில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மேற் கொள்ளப்படுகிறது.
காலை 8 மணிக்கு துவங்கும் வாக்கு எண்ணிக்கையில் ஒரு மணி நேரத்தில் முடிவுகள் தெரிய ஆரம்பிக்கும். மாலைக்குள் அனைத்து சட்டசபைத் தொகுதிகள் முடிவுகளும் வெளியாகிவிடும். மாயாவதி ஆட்சி செய்த உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண் டது. 403 தொகுதி கொண்ட உ.பி.யில் காங்கிரஸ் அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணியுடன் 337 தொகுதிகளில் போட்டியிட் டது.
கடந்த 2007ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது காங்கிரஸ் வெறும் 22 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரசுக்கு 22 எம்.பி. தொகுதிகள் கிடைத்ததால் பகுஜன்சமாஜ், பாஜக, சமாஜ்வாதி கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன.ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தின் 403 தொகுதிகளிலும் போட்டி யிட்டது.
சமாஜ்வாதி 402 தொகுதியிலும், பாஜக 398 தொகுதியிலும், ராஷ்ட்ரிய லோக்தளம் 46 தொகுதி யிலும் போட்டியிட்டன.கடந்த சட்டமன்றத் தேர்தலில் உ.பி. மாநிலத்தில் 206 தொகுதிகளில் வென்ற பகுஜன் சமாஜ், தனிப் பெரும்பான்மை பெற்றது. சமாஜ்வாதி 97 தொகுதி களையும், பாஜக 50 இடம் ராஷ்ட்ரிய லோக்தளம் 10 இடங்களையும் வென்றன. சுயேட்சைகள் மற்றும் இதர கட்சி உறுப்பினர்கள் 17 இடங்களை பெற்றனர்.பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் கேப் டன் அம்ரீந்தர் சிங் தலை மையிலான காங்கிரஸ் கட் சியில் உள்ள பாஜக – சிரோன்மணி அகாலிதளம் கூட்டணியிடம் இருந்து அரசைக் கைப்பற்ற முடியும் என நம்புகிறது.பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டது. சிரோன் மணி அகாலிதளம் 94 இடத் திலும் பாஜக 23 இடத்தி லும் போட்டியிட்டன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிரோன்மணி அகாலிதளம் 5 இடங்களை பெற்றது. காங்கிரஸ் 42 பாஜக, 19 சுயேட்சைகள் 6 இடங் களை பெற்றனர். பாஜக ஆட்சி செய்த உத்தர்காண்ட் மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 70 தொகுதிகளில் 36 தொகு தியை வென்று, பாஜக, தனிப் பெரும்பான்மை பெற்றது. இந்த முறை கடுமையான சவாலை எதிர்கொண்டது.
தேர்தலுக்கு முன்னர், தனது முதல்வர் ரமேஷ் போக்ரி யாவை மாற்றி பி.சி.கந்தூரி யை முதல்வராக்கியது. உத் தர்காண்ட்டில் பாஜக, காங் கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி கள் 70 தொகுதி களிலும் போட்டியிட்டன. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங் கிரஸ் 20 தொகுதிகளில் வென்றது. பகுஜன் சமாஜ் 8 இடத்தில் வென் றது. உத்தர்காண்ட் கிரந்தி பால் கட்சி 3 இடம்பெற்று இருந்தது. கடந்த தேர்தலில் 3 சுயேட்சைகள் வென்றனர்.மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சட்டமன்றத்தேர்த லில் காங்கிரஸ் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 31 இடத்தை வென்று தனிப் பெரும்பான்மை பெற்றது. மணிப்பூர் மக்கள் கட்சி (எம்பிபி) 5 இடத்தையும், என்சிபி, சிபிஐ தலா 4 இடத்திலும், தேசிய மக்கள் கட்சி மற்றும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலா 3 இடத்தி லும் வென்று இருந்தன.
சுயேட்சைகள் 10 இடங் களைக் கைப்பற்றி இருந்தனர். காங்கிரஸ் முதல்வர் இபோபி சிங் தனது கட்சி கடுமையான சவாலை எதிர் கொண்டதாக கருதுகிறார்.கோவாகோவா மாநிலத்தில் தி கம்பர் காமத் தலைமை யில் காங்கிரஸ் அரசு நடந் துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவுடன் காங்கிரஸ் கடுமையாக மோதியுள்ளது.கோவாவில் என்சிபி யுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. எம்.ஜி.பி. யுடன் பாஜக கூட்டணியில் நுழைந்துள்ளது. கோவா வில் சட்டவிரோத சுரங்க முறைகேடு பிரச்சனையான போதும், தேர்தலில் பெரி தாக எதிரொலிக்கவில்லை. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 16, பாஜக 14, என்சிபி 3, எம் ஜிபி, எஸ்ஜிஎப், யுஜிடிபி மற்றும் சுயேட்சைகள் தலா 2 இடம்பெற்றன.

Leave A Reply

%d bloggers like this: