திருப்பூர், மார்ச் 5- திருப்பூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் திருமணமாகாத முதிர் கன்னிகள் உதவித் தொகை ஒருவருக்கும், முதியோர் உதவித் தொகை 8 பேருக்கும், ஊனமுற்றோர் உதவித் தொகை இரு பெண்களுக்கும் என மொத்தம் 11 பேருக்கு மாத உதவித் தொகை தலா ரூ.1000 வீதம் வழங்குவதற்கு உத்தரவுகள் வழங்கப்பட்டன.
திங்களன்று நடைபெற்ற இந்த முகாமில் மேலும் உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினரின் இயற்கை மரண ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.2 ஆயிரம் வி.ஏ.இம்தாதுல்லாஹ் என்பவரின் உறவினர் சுவைதா பேகத்துக்கு வழங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: