கோவை, மார்ச். 5-கோவையில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஹோலி பண்டிகை முன்னிட்டு 10 சதவிகிதம் கூடுதல் டால்க் வேல்யூ சலுகை திட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் தெரிவிக்கையில்: கோவை ஹோலி பண்டிகை முன்னிட்டு 2ஜி மற்றும் 3ஜி மொபைல் சேவை பயன்படுத்தும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி ரூ.100க்கான பிரிபெய்டுரீ சார்ஜ் கூப்பன் வாங்கினால் ரூ.100 புல் டாக்டைம் அளிக்கப்படுகிறது. ரூ. ஆயிரத்திற்கு மேல் டாப் அப் கார்டு வாங்குவோருக்கு 10 சதவிகிதம் கூடுதல் டாக் வேல்யூ சலுகை மார்ச்- 10ம் தேதி வரை அளிக்கப்படுகிறது. இச்சலுகையை பிஎஸ்எனஎல் பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.