காஞ்சிபுரம், மார்ச் 5 –
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை துறை மூலம் விவசாயிகளை டில்லிக்கு அழைத்துச் சென்று பயிற்சி பெற சில நபரின் பெயர் பட்டியல் தயார் செய்யப் பட்டுள்ளது. தயார் செய் யப்பட்டு பட்டியலில் பெயர் பெற்றுள்ள அனைவரும் ஆளும் கட்சியை சார்ந்தவர் களாக மட்டும் உள்ளனர். எனவே இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தற் போதுள்ள பெயர் பட்டி யலை நிறுத்தி விட்டு கட்சி சார்பில்லாமல் விவசாயிகள் பெயரினை தேர்வு செய்திட வேண்டுமென அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு அளிக்கும் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.நேரு, செயலா ளர் சி.பாஸ்கரன், வட்டச் செயலாளர் இ.லாரன்ஸ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி. சங்கர், சிபிஎம் வட்டச் செய லாளர் எம்.ஆறுமுகம் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: