ஈரோடு,மார்ச்.5-வேலை நியமனச் சட்டத்தை அமுலாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திங்களன்று காலை ஈரோட்டில் தொழிலாளர் துறை அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் (சி.ஐ.டி.யு)-வின் மாவட்டத் தலைவர் ஆர். இளங்கோவன் தலைமை வகித்தார்.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன், மாநிலச் செயலாளர் டி. ரவி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். சி.ஐ.டி.யு மாவட்ட உதவித் தலைவர் ப. மாரிமுத்து, சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் எஸ். சுப்ரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மருத்துவப் பிரதிநிதிகளின் அகில இந்திய சம்மேளனத்தின் தலைவர்களை வேலை நீக்கம் செய்த நிர்வாகங்களின் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். மருத்துவப் பிரதிநிதிகளுக்கு 8 மணி நேர வேலை என்பதை நிர்ணயித்திட வேண்டும். மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்கு விற்பனை பிரதிநிதிகள் வேலை நியமனச் சட்டத்தை அமுலாக்கிட வேண்டும்.
1982-ம் ஆண்டு சட்டத்தின்படி விற்பனையை ஒரு தொழிலாக அங்கீகரித்திட வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் எஸ். நாராயண சாமி நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.