நாகர்கோவில், மார்ச் 5-
வீடு இழந்தோருக்கு இழப்பீடு கேட்டு திங் களன்று பார்வதிபுரத்திலி ருந்து நடைபயணமும் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடை பெற்றது.சமீபத்தில் பார்வதிபுரம் அனந்தன் நகர், கேசவதிருப் பாபுரம் போன்ற பகுதிகளில் புறம்போக்கில் நீண்ட கால மாக அமைக்கப்பட்டிருந்த ஏழை மக்களின் குடிசை கள் அகற்றப்பட்டன.
இதனால் பாதிக்கப் பட்ட மக்கள் மாற்று இடம் இன்றி சாலையோரம் வசிக் கும் அவல நிலை ஏற்பட் டுள்ளது. எனவே அந்த மக் களுக்கு மாற்று இடமும் உரிய நஷ்ட ஈடும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பார்வதிபுரம் சந் திப்பிலிருந்து திங்களன்று காலையில் நடைபயணம் புறப்பட்டது. நடைபயணத்திற்கு மாவட்டச் செயலாளர் மலைவிளை பாசி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட் சியின் மாவட்டச் செயலா ளர் என்.முருகேசன் துவக்கி வைத்துப் பேசினார்.
கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். எஸ். கண் ணன், சிஐடியு மாவட்டத் தலைவர் செல்லப்பன், முன் னாள் எம்எல்ஏ லீமா றோஸ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.நடைபயணம் நாகர் கோவிலில் மாவட்ட ஆட் சியர் அலுவலகம் முன்பு முடிவுற்றது. அங்கு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் இராஜாக்க மங்கலம் ஒன்றியச் செயலா ளர் ஷாகுல் ஹமீது தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் தங்கப்பன், துணைத் தலை வர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
போராட் டத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை, கட்டு மானத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் தங்கமோகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலை வர் ஆர். செல்லசாமி ஆகி யோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் சிபி எம் நிர்வாகிகள் அந்தோணி, மாதவன், மணி, சங்க நிர் வாகிகள் சிவதாணு, பத்ம நாபபிள்ளை, சார்லஸ், சுந்த ரேசன் ஆகியோர் உட்பட எராளமானோர் பங்கேற்றனர்.
——————————————
பார்வதிபுரம் ஆற்றுப் புறம்போக்கில் அமைக்கப்பட் டிருந்த குடிசைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. ஆனால், அங்கு அமைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள் அகற்றப்பட வில்லை. மக்களுக்கு ஒரு நியாயம். கடவுளுக்கு ஒரு நியா யமா என பொதுமக்கள் கேட்கின்றனர். உலகம் முழுவதும் சொந்தக் கட்டிடம் வைத்துள்ள கடவுளுக்கு இங்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சொந்த இடமில்லாத ஏழைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாதா? ஏழைகளின் இருப்பிடத்தை அரசு அழித்தது தான் வேதனைக்குரியது.
——————————————–

Leave A Reply

%d bloggers like this: