ஓசூர், மார்ச். 5-விவசாயத்திற்கு மும் முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் ஓசூர் மின்வாரிய அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியச் செயலாளர் கோதண்டராமன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் மூர்த்தி, மாதர் சங்க மாவட்டச் செய லாளர் அஞ்சலாமேரி, வாலி பர் சங்க மாவட்டச்செய லாளர் அஸ்வத் நாரா யணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சேகர், மாவட் டத் தலைவர் வாசுதேவன், சந்திரசேகர், லட்சுமய்யா, அப்போஜிரெட்டி, அனு மந்த்ராஜ், சுந்தரமூர்த்தி ஆகி யோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம்விவசாயத்திற்கு தடை யில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தியும் தொடர்ச் சியாக பத்து மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரி யும் ஊத்தங்கரை பெரியார் சிலை அருகில் கே.செல்வ ராசு, ஜே.சிவலிங்கம் தலை மையில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் விவ சாய சங்கத் தோழர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மத்திய மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கைக் கண் டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.