வேலூர், மார்ச்.5-ஆதி திராவிட நலப்பள்ளி ஆசிரியர்கள் உரிமை பாது காப்பு சங்க மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இதில் ஆதிதிராவிட நல விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் ஆசிரியர் இல்லத்தில் மாவட்டத் தலைவர் வ. மதியழகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் துரை. கருணாநிதி, மாவட்ட பொரு ளாளர் ஆர். பார்த்தசாரதி, மாவட்ட துணைச் செயலாளர் ஆ. மோகன்தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கல்வித்துறையில் தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக் கப்படுகிறது. ஆனால், ஆதிதிராவிட நலத் துறையில் தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் 5 முது கலை பட்டதாரி பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளுக்குள் பாரபட்சமான இந்த நிலைமைக்கு சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது. கல்வித் துறை போலவே 9 பணியிடங்களை அனுமதிக்க வேண் டும். ஆர்எம்எஸ்ஏ மூலம் ஆதிதிராவிட நலத்துறையிலும் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: