சேலம். மார்ச் 5-இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம் பெண்கள் உபகுழு சேலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர் மேற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகரக்குழுவின் சார்பில் இளம் பெண்கள் உபகுழு அமைப்பு கூட்டம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாரதி, மாவட்ட துணைச் செயலாளர் சி. ரேவதி, மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார், காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் இணை செயலாளர் டி.ஏ.உண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் இளம்பெண்கள் உபகுழுவின் கன்வீனராக ரம்யா, உதவி கன்வீனராக கற்பகம் ஆகியோரை உள்ளடக்கிய 7 பேர் கொண்ட உபகுழு அமைக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: