தனியார் மயத்தின் கோரப் பசிக்கு இரையாகி நம் தேசம் இதுவரை இழந் துள்ளது ஏரா ளம், ஏராளம். போக்குவரத்து, தகவல் தொடர்பு, கனிமவளம், மின் உற்பத்தி, எண்ணெய் வயல் என பல கேந்திரமான தொழில் களை அரசு நிர்வகிக்காத தால் பல்வேறு நெருக்கடிகளை இந்த தேசத்து மக்கள் சந்தித்து வரு கின்றனர். விவசாயம், வணி கம், உற்பத்தி ஆலைகளில் தனியார் மயத்தின் லாப வெறிச் செயல்களால் ஏழை, எளிய மக் களின் வாழ்வாதாரம் கேவலப் பட்டுக் கிடக்கிறது. இவை அனைத்திற்கும் மேலாக கல் வித் துறையில் தனியார் மயம் நடத்தியுள்ள தாக்குதல்களில் எதிர்கால இந்தியா என்று நாம் பெருமையாக போற்றும் மாண வர்களின் நிலையோ சீரழிவு பாதையில் மிக வேகமாக சென்று கொண்டுள்ளது.தமிழகம் உள்ளிட்ட இந் தியாவின் கல்வித்தரம் உலக ளவில் உயர்ந்து நின்று நமக்கு பெருமை சேர்த்த காலம் உண்டு. உலகின் பல்வேறு தேசங்களில் இருந்து பலர் நம் தமிழகத்திற்கு கல்வி பயில வந்த நிலை வரலாற்று காலத் திலேயே நிகழ்ந்ததை நாம் அறிவோம்.ஆனால் இன்று, சென்னை யில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவன் வகுப்பறையில் பாடம் நடத்தும் ஆசிரியையை குத்திக் கொன்றுள்ளான். விருதுநகர் நரிக்குடி பள்ளி மாணவர்களான இருவர் ஆசி ரியர்களுக்கு கொலை மிரட் டல் விடுத்து, காவல் துறையி னால் கைது செய்யப்பட்டுள் ளனர். திருப்பூர் மாவட்டம் உடு மலைப் பேட்டை ஆர்.கே.ஆர் பள்ளி மாணவர்கள் கிருஷ்ண குமார், அணுஜ் ஆகிய இரு வரும் எந்த பண்டிகைகளுக் கும் விடுமுறையே விடா மல் தொடர்ந்து கண்டிப்புடன் படிக்க மிரட்டப்பட்டதால் தற் கொலை செய்து கொண்டுள் ளனர். திருநெல்வேலி வண் ணாரப் பேட்டையை சேர்ந்த 6 மாணவர்கள் பணத்திற்காக விற்பனை பிரதிநிதி ஒருவரை கொலை செய்துள்ளனர். சென் னை கொடுங்கையூரில் பொறி யியல் கல்லூரி மாணவன், பிளஸ் 2 மாணவன், 10 வது படிக்கும் மாணவன் ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு மாண வனை கடத்தி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சீரழிவுகளுக்கு எது காரணம்?. மாணவர்களின் மனநிலையை தற்போதைய கல்வி அமைப்பும், சுற்றுச் சூழ லும் கலவரப்படுத்தி விட்டது. தனியார் மயத்தின் நாகரிக மாயத்தில் மயங்கி பெரும் பாலானோர் தனியார் கல்வி நிறுவனங்களை நாடிச் சென்று விட்டதால் பொதுக் கல்விக் கூடங்கள் புறக்கணிக்கப்பட் டது. உள் கட்டமைப்பு உள் ளிட்ட போதுமான சீரமைப்பு கள் பொதுக்கல்விக் கூடங்க ளுக்கு கிடைக்காமலே போனது.சமச்சீர் பாடதிட்டதை அமல்படுத்தவே கண்ணைக் கட்டும் நிலையில் சமச்சீர் கல்வி என்பது கனவாகவே போய் விடுமோ என்றே தோன்று கிறது.இது ஒருபுறம் இருக்க, தனி யார் கல்வி நிலையங்களில், வெட்டுவதற்காக வளர்க்கப் படும் வெள்ளை கோழிகளை போல, தேர்வுகளில் முதல் ரேங்க் பெறுவதற்காக பாடத் திணிப்பு மட்டுமே நடக்கிறது. விளையாட்டு மைதானமே இல்லாத பல பள்ளிகளை இன்று காணமுடிகிறது. கிரிக் கெட்டை தவிர வேறு பல விளையாட்டுக்களும் உள் ளது என்பதை பல மாணவர் கள் நம்பவே மறுக்கின்றனர். பிறகு எப்படி மாணவர்களின் மனநிலையை ஆரோக்கிய மாக வைத்திருக்க முடியும். பேராண்மை என்ற திரைப் படத்தில் வரும் வசனத்தை போல, இந்த தேசத்தின் வாழ் வியல் தெரியாமல், கலாச் சாரம் தெரியாமல், வரலாறு தெரியாமல் ஒரு மாணவன் பாடத்தில் மட்டும் முதல் ரேங்க் வாங்கி என்ன செய் வது?. பாடத்தை மண்ப்பாடம் செய்வது, டி.வி பார்ப்பது மொபைல் போனில் மூழ்குவது மட்டும் தான் இன்று மாணவர் கள் செய்யும் வேலையாக உள்ளது.பெரும்பாண்மையான மாணவர்கள் தனியறைகளுக் குள் காலத்தை கடத்துகின் றனர். கம்ப்யூட்டர், இன்டர் நெட், புதிய தொழில்நுட்ப செல் போன்களின் வழியே தாரா ளமாக வழியும் ஆபாசப்படங் கள், டி.வி சீரியல்களில் காட் டப்படும் வன்முறை காட்சிகள், மோசமான உணர்வுகளை தூண்டும் சினிமாப்பாடல்கள் ஆகியவற்றால் சிதைக்கப்படு கின்றனர்.நம் நாட்டின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், சிலம்பாட்டம், பொம்மலாட் டம் போன்றவற்றை ஏதோ மூன்றாம் தர செயலாக சித் தரிக்கப்பட்டு மாணவர்களின் மனதை சீரழிப்பதில் பெரும் பங்கு வகிப்பது நமது தெலைக் காட்சி சேனல்கள்.கார்டூன் சேனல்களிலேயே பாலியல் காட்சிகள் ஒளிபரப்பப் படுகிறது. கனா காணும் காலங்கள் என்ற ஒரு டி.வி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நற்பண்பு களை(!) போதித்து புண்ணியம் தேடிக்கொள்கிறது அந்த சேனல். நிகழ்ச்சிகள் ஒருபுறம் இருந்தாலும் விளம்பரங்களின் நாற்றம் எல்லை மீறுகிறது. சோபவில் படுத்திருக்கும் 10 வயது சிறுவனை அழைத்துச் சென்று வாசலில் சைக்கிள் ஓட் டும் சிறுமியை பார்க்க வைக் கிறது ஒரு செல்போன் நிறுவ னத்தின் மொட்டை மூக்கு நாய். இதன் மூலம் வேறு எதை யோ விற்க முயல்கிறது அந்த விளம்பரம். மூச்சுவிட மறந்து மிராண்டா குடிப்பதே ஆணுக் கும் பெண்ணுக்கும் சுகம் என் பதாய் பினாத்துகிறது மற் றொரு விளம்பரம். தனியார் கல்வி நிறுவனங் களில் உள்ள மேல்தட்டு மாணவர்களிடம் அனைத்து ஹைடெக் சாதனங்களும் சாதாரணமாக புழங்குகிறது. கையில் இருக்கும் அதிகப்படி யான பணம் அனைத்து பிரச் சனைகளிலும் தாமே முடி வெடுத்துக் கொள்ளலாம் என்ற மனோதைரியத்தை அவர்களுக்கு அளிக்கிறது. அவசர காலத்தில் அவசரமாக வாழ்க்கையை நடத்திவரும் பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளை கூர்ந்து கவ னிக்க நேரமில்லை.இதே சூழலில் வளைய வரும் அடித்தட்டு மாணவர் களுக்கு தவறான ஒரு கலாச் சாரம் கற்பிதம் செய்யப் படுகிறது. கற்பிதம் செய்து கொண்டுள்ள வாழ்க்கைக் காக அவர்கள் ஏங்க துவங்கி விடுகின்றனர். ஒழுக்கம், பண்பு என்பதையெல்லாம் ஏதோ பழைய பாத்திரங்களை போல ஒதுக்கிவிட்டு, கற்பனை உல கில் வலம் வர துடிக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக தவ றான சேர்க்கை, விரும்பியதை அடைய வன்முறையில் ஈடுபடு வது, அதில் தோல்வி ஏற்படும் போது விரக்தி, பலாத்காரம், தற்கொலை, கொலை, கொள்ளை ஆகியவை. இத்தகைய சீர்கேடுகளை சரிப்படுத்துவது யார் பொறுப்பு. கலவரப்பட்டு சிதைந்து கிடக் கும் மாணவ சமுதாயம் செம்மைபெறும் சூழல் உரு வாக்கப்பட வேண்டும். பக் கத்து வீட்டு கூரையில் எரியும் தீ விரைவில் நம் வீட்டிற்கும் நிச்சயம் பரவும் என்பதை உணர்ந்து, ஊடகங்கள் துவ ங்கி, ஆசிரியர்கள் முதல் குடு ம்ப உறுப்பினர்கள் வரை ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே பன்னாட்டு நுகர்வு கலாச்சார மோகத்தில் சிக்கித் தவிக்கும் மாணவ சமு தாயத்தை மீட்டெடுக்க முடி யும். எதிர்கால சந்ததியி னருக்கு நமது பாரம்பரிய கலாச்சாரத்தை மகிழ்ச்சியுடன் பரிசளிக்க முடியும்.ஜெ. எஸ். கண்ணன்

Leave a Reply

You must be logged in to post a comment.