சென்னை, மார்ச் 5 -இலங்கை அரசுக்கும், எல்டிடிஇக்கும் போர் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இலங்கைத் தமி ழர்களின் நல்வாழ்வுக்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப் படவில்லை.
முள்வேலி முகாம்களில் இருப்பவர் களை சொந்த இடத்தில் மீள்குடியமர்த்த நட வடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங் களை இணைத்து மாநில சுயாட்சி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம உரிமை, சம அந்தஸ்து கிடைக்கும் வகையில் அரசி யல் தீர்வுகாண இந்தியா தலையிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திங்க ளன்று சென்னையில் மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் இலங் கைத் தூதரகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
இதுபற்றிய விவரம் வரு மாறு:
இலங்கையில் அரசுக் கும், விடுதலைப் புலிகளுக் கும் இடையிலான இறுதிக் கட்ட உள்நாட்டுப் போரில் இலங்கைத் தமிழர்கள் பல் லாயிரம் பேர் கொல்லப் பட்டனர். அச்சமயத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இதுவரை விடுதலை செய் யப்படவில்லை, பலத்த காய முற்றவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது போன்ற பல்வேறு மனித உரிமை மீறல் குற்றங்கள் நடை பெற்றன.
போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் போர்க்குற்றம் இழைத்தவர் கள் மீது இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக் காமல் உள்ளது. இதனை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக் கிறது.எனவே, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் இறுதிக் கட்டத் தில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது நம்பகத் தன்மை வாய்ந்த, சர்வதேச தரத்திலான, சுயேட்சையான விசாரணையை கால தாமத மின்றி நடத்த வேண்டும், போர்க்குற்றங்கள் நிகழ்த் திய போர்க்குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசை, இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.
முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து இலங்கைத் தமி ழர்களை, அவர்களின் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தி, இயல்பு வாழ்க் கை தொடர்வதை உறுதிப் படுத்த வேண்டும், இலங் கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை உள் ளிட்ட சுயாட்சியை உறு திப்படுத்தும் அரசியல் தீர் வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்; அதற்கு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட் டம் நடைபெற்றது.டி.டி.கே சாலை, கதிட் ரல் சாலை சந்திப்பு அருகே இருந்து மாநிலச் செயலா ளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் சிபிஎம் ஊழி யர்கள் பேரணியாக தூதர கம் நோக்கி ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றனர்.
அவர் களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து சாலையில் அமர்ந்து கட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.அப்போது செய்தியா ளர்களிடம் பேசிய ஜி.ராம கிருஷ்ணன் கூறியது வருமாறு:இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற கடைசி கட்ட யுத்தத்தில், இலங்கை அரசு விமானங் கள் மூலம் குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கானவர் களை கொன்றது. 3 லட்சம் பேரை முள்வேலி முகாம் களில் அடைத்து வைத்துள் ளது. வெள்ளை வேனில் தமிழ் இளைஞர்களை கொண்டு சென்று சித்ரவதை செய்து சிறையில் அடைத்தது.மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசியது. பலத்த காயமடைந்தவர் களுக்கு கூட சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டது. இவ்வாறு ராஜபக்சே தலை மையிலான அரசின் ராணு வம் பல்வேறு மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது.
இவற்றை விசாரித்து போர்க் குற்றம் புரிந்த ராணுவத் தினர் மீது அரசு கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும்.போர் முடிந்த பிறகு, இலங்கை அரசுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே 11 முறை பேச்சு வார்த்தை நடைபெற்றும் எந்த முன்னேற்றமும் ஏற் படவில்லை. தமிழர் பகுதி களில் தற்போதும் ராணுவ ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுதந்திர மின்றி மக்கள் மனோரீதி யாக பாதிக்கப்பட்டுள் ளனர். இலங்கை அரசை இந் திய அரசு நிர்பந்தித்து, அரசியல் தீர்வுகாண நட வடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி னார்.கேள்வி ஒன்றுக்கு பதி லளித்த ஜி.ராமகிருஷ்ணன், இலங்கை அரசு அமைத்த “கற்ற பாடங்கள் மற்றும் இணக்கத்திற்கான ஆணை யம்” சில பரிந்துரைகளை செய்துள்ளது. அந்த பரிந் துரைகளில் சிலவற்றை கூட இலங்கை அரசு நிறைவேற்ற வில்லை. அந்த ஆணையத் தின் பரிந்துரைகள் அனைத் தையும் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். அத்தகைய பிரச்சனை களைத்தான் ஐ.நா.மனித உரிமை கூட்டத்திலும் வலி யுறுத்தப்படுகிறது.
சர்வதேச அளவில் எழும் குரல் களோடு மார்க்சிஸ்ட் கட்சி யும் சேர்ந்து குரல் கொடுக் கும் என்றார்.இப்போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் ப.செல்வசிங், பெ. சண்முகம், மாவட்டச் செய லாளர்கள் எல்.சுந்தரராசன் (வடசென்னை), ஏ.பாக் கியம் (தென்சென்னை), ஜி. மோகனன் (காஞ்சிபுரம்), மாநிலக்குழு உறுப்பினர் கள் க.பீம்ராவ் எம்எல்ஏ, எஸ்.கண்ணன், கே.சுவாமி நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.