திருப்பூர், மார்ச். 5-ரிசர்வ் வங்கியில் காவலர் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இது தொடர்பாக வேலைவாய்ப்புச் செய்தித்தாளில் கடந்த ஜனவரி 21ம் தேதி விளம்பரம் வெளியாகியுள்ளது. அதிலுள்ள விண்ணப்பப் படிவத்தில் விபரங்களைப் பூர்த்தி செய்து “ரிசர்வ் வங்கி, மனிதவள மேலாண்மைத் துறை, போர்ட் கிளாக்ஸ், 16, ராஜாஜி சாலை, த.பெ.எண் 40, சென்னை 600 001” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மேலே காவலர் பணிக்கான விண்ணப்பம் என்று குறிக்க வேண்டும் கோவை முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ச.ராதா இதைத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply