மதுராந்தகம், மார்ச் 5 –
கடுமையாக நிலவி வரும் மின்வெட்டினை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுராந்தகம் சூரக்குட்டை துணை மின் நிலையம் அருகில் (மார்ச் 5) திங்கள் அன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு வி. பொன்னுசாமி தலைமை தாங்கினார். வட்டச் செய லாளர் கே.வாசுதேவன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.மாசிலாமணி, எஸ்.ராஜா மற்றும் சர்ஜூண்குமார், வி.சசிகுமார், எஸ்.மகேந் திரன் உள்ளிட்டோர் கண் டன உரையாற்றினர்.
அம்பத்தூர், மார்ச், 5 -அம்பத்தூர் ஆசிரியர் கால னியில் வசிப்பவர் பால் டைட்டர்ஸ். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள் ளன. குண்டர் தடுப்பு சட் டத்தில் சிறையில் அடைக் கப்பட்டு கடந்த ஒரு வாரத் திற்கு முன்பு விடுதலையாகி வெளியே வந்தான். ஞாயிற் றுக்கிழமை மாலை சிவா னந்தா நகரில் நடந்த சவ ஊர் வலத்தில் பால்டைட்டர்ஸ் கலந்து கொண்டான். அப் போது அவனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்தவர்களுக் கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பிரபாக ரன், சுரேஷ் ஆகியோர் டைட்டர்சை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட் டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.