திண்டுக்கல், மார்ச் 5-
மின்வெட்டு தொடர்ந் தால் தமிழகத்தில் உள்ள 19 லட்சம் பம்புசெட் விவசா யிகளைத் திரட்டி மறியல் போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ. சண்முகம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.மின்தடையைக் கண் டித்து திண்டுக்கல்லில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-
மின்வெட்டின் காரண மாக தமிழ்நாடு இருட்டில் தவித்துக் கொண்டிருக்கி றது. 3 மணி நேரம் கூட உருப்படியாக மின்சார விநி யோகம் இல்லை. 24 மணி நேரமும் மின்விநியோகம் இல்லாமல் போகுமோ என்ற அச்சம் மக்கள் மத்தி யிலும் விவசாயிகள் மத்தியி லும் உள்ளது.
எனவே விவ சாயத்திற்கு10 மணி நேரம் தொடர்ந்து மின்சாரம் வழங்கினால் மட்டுமே தமி ழக விவசாயிகளை பாது காக்க முடியும். இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் உணவு உற்பத்தி பாதிக்கப் பட்டு நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது. மத்திய – மாநில அரசுகள் அமைத்த நிபுணர் குழுவில் இடம் பெற்றவர்களின் அறிக்கை யின் படி கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பா னது என அறியப்படுகிறது. எனவே உடனடியாக கூடங் குளம் அணுமின் நிலை யத்தை செயல்படுத்த வேண் டும். மத்திய அரசிடமிருந்து கூடுதலாக ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை மாநில அரசு வலியுறுத்தி பெற வேண்டும்.
தமிழக அரசுக்கு மத்திய அரசு 2825 மெகா வாட் மின்சாரம் தருவதாக ஒப்பந்தம் உள்ளது. ஆனால் இந்த அளவிலான மின்சா ரத்தை ஒருநாளும் மத்திய அரசு வழங்கியதில்லை. தமிழகத்தின் மின்தேவை யும் முன்பை விட அதிக அளவு கூடியுள்ளது.முதல்வர் பதவியேற்ற தும் தில்லி சென்று தமிழ கத்திற்கு தர வேண்டிய 2825 மெகாவாட் மின்சாரத்தை யும் வழங்க வேண்டும் என்று கேட்டார். தற்போது அதனை மீண்டும் வலியு றுத்த வேண்டும். தமிழகத் தில் உள்ள சிறு வியாபாரி கள், சிறு தொழிற்சாலை கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிப்புக்குள் ளாகி உள்ளார்கள்.
ஆனால் பன்னாட்டு நிறுவனங்க ளின் தொழிற்சாலைகளுக்கு மட்டும் மின்சாரம் தடை யின்றி வழங்கப்படுகிறது. ஆயி ரம் கோடி ரூபாய் முதலீடு போட்டு தொழிற்சாலை துவங்கும் பன்னாட்டு நிறு வனங்கள் ஏன் தாங்களா கவே மின்சாரத்தைத் தயா ரித்துக் கொள்ள மாட்டார் களா? தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள் உட் பட பல ஆலைகள் தங்க ளுக்குத் தேவையான மின் சாரத்தை தாங்களாகவே தயாரித்துக் கொள்கின்றன. மேலும் தமிழக அரசுக்கும் கூட இந்த ஆலைகளில் இருந்து மின்சாரம் கொடுக் கப்படுகின்றது. அப்படி இருக்கும் போது பன் னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை என்று கேட்கிறோம். தமிழ் நாட்டில் ஆற்றுப் பாசனம், ஏரி, கண்மாய் பாசனத்திற்கு அடுத்த படியாக அதிக அள வில் கிணற்றுப் பாசனம் தான் நடைபெறுகிறது.
தமி ழகத்தில் மட்டும் கிட்டத் தட்ட 19 லட்சம் பம்பு செட் விவசாயம் நடைபெறுகி றது. எனவே விவசாயத்திற்கு 10 மணி நேரம் மின்சாரத்தை வழங்க வேண்டும். இல்லை யெனில் இந்த 19 லட்சம் பம்புசெட் விவசாயிகளை யும் திரட்டி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் என்று பெ.சண்முகம் தெரி வித்தார்.

Leave A Reply

%d bloggers like this: