கரூர், மார்ச் 5-
மாநில அளவிலான மென் பந்து டென்னிஸ் போட்டி களில் 20 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் பெற்று கரூர் மாவட்ட வீரர் கள் மாநில அளவில் முதலி டம் பெற்று சாதனை படைத் துள்ளனர். அவர்கள் கரூர் மாவட்ட ஆட்சியரை சந் தித்து வாழ்த்து பெற்றனர்.மாநில அளவிலான 5வது மென்பந்து டென் னிஸ் சாம்பியன்சிப் போட் டிகள் சேலம் செயிண்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது.
இதில் கரூர் மாவட்ட பள்ளி மாணவ-மாணவியர் பங் கேற்று பரிசுகளைக் குவித் துள்ளனர். கரூர் காகிதபுரம் டிஎன்பிஎல் காலனியை சேர்ந்த பிரசன்னா ஒற்றை யர், இரட்டையர் (ஓப்பன் பிரிவிலும்), கலப்பு இரட் டையர் பிரிவிலும் மற்றும் சீனியர் குழு போட்டி ஆகிய நான்கு போட்டியிலும் முத லிடம் பெற்று தங்க பதக்கங் களை வென்றுள்ளனர்.
15 வயதிற்கு உட்பட் டோர் மற்றும் 12 வயதிற்கு உட்பட்டோர் ஒற்றையர் மகளிர் பிரிவில் டிஎன்பிஎல் பள்ளி மாணவிகள் அமிதா எஸ்.சிவா ,கே.எஸ்.ராகவி, கரூர் லார்ட்ஸ்பார்க் பள்ளி மாணவர்கள் ஒய்.லியாண் டர், அருள்சபரீஸ்வரன், ராம்விக்னேஷ், கௌசிக் சித்தார்த்தன், லியாண்டவர் ஜோஸ்வா ஆகியோர் முதலி டம் பிடித்து தங்கம் வென் றுள்ளனர்.இதில் 12 வயதிற்கு உட் பட்டோர் ஒற்றையர் பிரி வில் லியண்டாரும், 15 வய திற்கு உட்பட்டோர் இரட் டையர் பிரிவில் அருள்சப ரிஸ்வரன், ஆதிஸ்வரன், கே.எஸ்.ராகவி ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றனர்.சீனியர் ஒற்றையர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரி வில் கரூர் ஜீ.மதன்சேகர், ஜீ.சிவக்குமார், கே.எஸ். ராகவி ஆகியோர் மூன்றாமி டம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
மாநில அளவில் முதலி டம் பெற்ற மாணவர்கள் தேசிய அளவில் நடை பெறும் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர். விளையாட்டு போட் டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர் கரூர் மாவட்ட ஆட்சியரை சந் தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட வருவாய் அலுவ லர் தா.கிருஷ்த்துராஜ், கரூர் அசோசியேசன் பொதுச் செயலாளர் யூரிகாகரின் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: