திருவாரூர், மார்ச் 5-
தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வுக்கூட நுட்பனர் சங்க மாநில பொதுச்செயலாளரும், அரசு ஊழியர் சங்க முன் னணி தலைவருமான சுகுமார் சங்கப்பணிகளில் ஈடுபட் டதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதனைக் கண்டித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வுக்கூட நுட்பனர் சங்க ஒருங்கிணைந்த திருவாரூர், நாகை மாவட்ட அமைப்பின் சார்பில் தன்னெழுச்சி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜே. கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் எம்.பன்னீர்செல்வம், என்.சாந்தாராமன் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ஜி.பன்னீர்செல்வம் கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.பைரவநாதன் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து உரையாற்றினார். வட்டக்கிளை நிர்வாகிகள் எஸ்.தியாக ராஜன், என்.நடராஜன், வி.சக்திவேல், மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply