மேற்கு வங்கத்தில் விவசாயிகள் தற் கொலை செய்து கொள்கிறார்கள்; ஜங்கல் மகா லில் மக்கள் செக்யூரிட்டிப் படைகளால் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்; கல்வி நிலை யங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மாண வர்கள் அக்கட்சியினைச் சாராத மாணவர்க ளையும், ஆசிரியர்களையும் தாக்கி வருகிறார் கள்; உயர் கல்வி நிர்வாகத்தில் ஜனநாயக உரி மைகள் பறிக்கப்படுகின்றன.
அரசு ஊழியர் களின் தொழிற்சங்க உரிமைகள், பறிக்கப் படுகின்றன. திரிணாமுலுக்கு வாக்களித்த மக்கள் வகையறியாது திகைத்து நிற்கின் றனர். இதுவே இன்றைய மேற்கு வங்கம். இது குறித்து எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி (3-3-2012) வெளியிட்டிருக்கும் கட்டு ரையின் சில அம்சங்கள் இங்கு சுருக்கமாக தரப்பட்டிருக்கின்றன.“மம்தா பானர்ஜி கல்கத்தா நகரத்தினை நீலமயமாக்கி வருகின்றார். சாலைகளில் உள்ள டிவிடைர் முதல் மரங்களின் அடிப் பகுதி வரையிலும் அதே போன்று பாலங்கள் முதல் பொதுக் கழிப்பிடங்கள் வரை அனைத் திற்கும் நீல வண்ணம் பூசப்படுகிறது. ” (சண்டே எக்ஸ்பிரஸ் -19 -25 , பிப்ரவரி 2012.) “விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில்லை; நீங்கள் குடித்து விட்டு செத்துப் போகலாம்; அரசாங்கம் உங்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கும்” (பெங் கால் இணைய தள போஸ்டர்)அண்மையில் மேற்கு வங்கத்திலுள்ள சிறு விவசாயிகள் சிலர் கடன் தொல்லை யால் சாராயத்தில் விஷம் கலந்து குடித்து தற் கொலை செய்து கொண்டனர். ஆனால், மம்தா பானர்ஜி, அது மார்க்சிஸ்ட்டுகளின் கட்டுக் கதை என்று கூறினார். ஆனால், அதே வேளையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்குவதாகவும் அறிவித்தார்.
இதைக் கேலி செய்து வந்தது தான் இணைய தள போஸ்டர். இது கிராமப்புறத்தில் உள்ள நிலைமை என்றால், நகர்ப்புறத்தில் நீலமய மாக்கல் போன்றவை மட்டுமே நடைபெற்று வருகிறது. இவ்வாறு கிராமங்களிலும் நகரங் களிலும் மம்தாவின் கவர்ச்சிப் பேச்சுக்களை நம்பி வாக்களித்த மக்கள் இன்று பெரும் ஏமாற்றத்தினைச் சந்தித்து வருகின்றனர்.
கிராமப் புறத்தில்…
கிராமப்புறங்களில் குறைந்த பட்ச ஆதரவு விலையில் செய்ய வேண்டிய தானி யக் கொள்முதல் திட்டமிட்டுத் தாமதப்படுத் தப்படுகிறது. அரசின் கொள்முதல் இல்லாத நிலையில், இது திரிணாமுல் கட்சியின் புதிய ஆதரவாளர்களான இடைத்தரகர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களால் நன்கு பயன்படுத்தப் படுகிறது. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்காகவே அத்தகைய சூழ்நிலையே உருவாக்கப்படுகிறது.
அடி மாட்டு விலைக்கு தங்களது தானியங்களை விற்க வேண்டிய சூழ்நிலைக்கு சிறிய விவ சாயிகள் தள்ளப் படுகிறார்கள். இவ்வாறு கிடைக்கும் குறைந்த விலையில் அவர்க ளால், தங்களது கடன்களை அடைக்க முடியவில்லை. இவர்களில் சிலர் தான் இப் போது தற்கொலை செய்துகொண்டவர்கள். இது தவிர விவசாயத் துறையில் மம்தா அரசின் வரிக்கொள்கை மிகவும் கடுமையாக உள்ளது. பழைய வரி பாக்கியினை வசூல் செய்வதில் மிகவும் கெடுபிடி செய்யப்படு கிறது. சென்ற ஆண்டில் வரி இலக்கு ரூ.400 கோடி. நிகழாண்டில் அது ரூ.1200 கோடி யாக அதாவது மூன்று மடங்கு உயர்த்தப்பட் டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் வரி கேட்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில், சிறு, குறு விவசாயிகள் மிக வும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். இந்நிலை யில் பலர் நிலங்களை விற்கத் தயாராகி வரு கின்றனர். இதை வாங்கும் நில முதலைகள் அடுத்த கட்டத்தில் அதை கார்ப்பரேட்டு களுக்கு விற்பார்கள். இவ்வாறு சரியாகத் திட்டமிட்டுத்தான் அதைச் செய்கிறார்கள். எனவே மிக விரைவில் விவசாயிகள் பலர் ஓரங்கட்டப்படுவார்கள் அல்லது நிலங் களை விட்டு அவர்களே வெளியேறி விடு வார்கள்.
ஜங்கல் மகால் வனப்பகுதியில்…
மார்க்சிஸ்ட்டுகளை துரத்தி அடிப்பதற் காக, அன்று மாவோயிஸ்டுகளுடன் கை கோர்த்துக் கொண்ட மம்தா, இன்று வன் முறை கிளர்ச்சியியை அடக்குவதற்கான மத்திய அரசின் உள்துறை அமைச்சகக் கொள்கைகளை முழுமையாக அமல்படுத்து வதன் மூலம் ஜங்கல் மகால் பகுதியில் மக்களின் ஜனநாயக உரிமைகளையே பறித்து வருகிறார். மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜியை என்கவுண்ட்டர் கொலை செய்ததும் இம்முறையில் தான்.
செக்யூரிட்டி படைகள் இந்தப் பகுதியில் பயங்கர ஆட்சி யினை உருவாக்கி வருகிறார்கள். ஆதிவாசி மக்கள் நிறைந்த இந்தப் பகுதியில் அவர் களைப் பிளவு படுத்துவதற்காக, அந்தப் பகுதியிலிருந்து 10,000 பேரை காவல் துறைப் பணிக்கு எடுத்துக் கொள்வதாக மம்தா அறிவித்திருக்கிறார். சத்தீஸ்கர் அரசு நக்சலைட்டுகளை அழிப்பதற்கு உரு வாக்கிய “சால்வா ஜூடும்” போன்ற உத்தி தான் இதுவும். கல்வித் துறையில்கல்வி நிறுவனங்களில் உள்ள சி.பி.ஐ (எம்) ஆதரவாளர்கள் அனைவரையும் ஒழிக் கும் நோக்கில் வன்முறை ஏவிவிடப்படு கிறது.
கல்வி நிலையங்களில், குறிப்பாக கல்லூரிகளில் திரிணாமுல் கட்சிக்கு ஆதர வளிக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது திரிணாமுல் கட்சி மாணவர்கள் தாக்கு தல் தொடுக்கின்றனர். ராய்கஞ்ச் கல்லூரி முதல்வர் தாக்கப்பட்டார். பிர்பூம் கல்லூரி ஒன்றின் முதல்வர் மயக்கமடைந்து விழும் வரை அறையில் அடைத்து வைக்கப்பட்டார். இப்படி வன்முறை தொடர்ந்து வருகிறது. இது வெல்லாம் மம்தாவிற்கு கடந்த தேர்தலில் ஆதரவளித்த கல்வியாளர் கள் மத்தியிலேயே எதிர்ப்பினை உருவாக்கி வருகிறது. அத்த கைய கல்வியாளர்களில் ஒருவரான சுனந்தோ சன்யால் ‘பர்தமான்’ ஏட்டிற்கு அளித்த பேட்டியில் திரிணாமுல் அரசினை கடுமை யாக விமர்சனம் செய் திருக்கிறார். திரிணா முல் மாணவர்களின் செயல்களை “கங்காரு கோர்ட்” என வர்ணித்திருக்கிறார்.
பல்கலைக் கழக நிர்வாகத்தில்…
இதற்கெல்லாம் மகுடம் வைப்பது போல உயர் கல்வி நிர்வாகத்தின் சுயேச்சைத் தன்மை அதிரடியாகப் பறிக்கப் பட்டிருக் கிறது. மேற்கு வங்க பல்கலைக் கழகச் சட் டங்கள் திருத்த அவசரச் சட்டம் ஒன்றினை அண்மையில் கவர்னர் பிறப்பித்திருக்கிறார். பல்கலைக் கழகங்களை அரசியல் கட்சி களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகவே இந்த சட்டம் என மம்தா கூறிவருகிறார். ஆனால், அதிகார வர்க்கத்தின் முழுமை யான கட்டுப்பாட்டிற்குள் அதை கொண்டு வருவதற்கான நோக்கம் கொண்டதே இந்த அவசரச் சட்டம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை கவர்னரே நியமிப்பார்.
இதில் எவருக்கும் எந்த பங்களிப்பும் இருக் காது. செனட், சிண்டிகேட் அமைப்புக் களுக்கும் தேர்தல் கிடையாது; உறுப்பினர் கள் நியமனம் செய்யப்படுவார்கள். அந்த அமைப்புக்களில் ஆசிரியர் அல்லாத ஊழி யர்கள் மற்றும் மாணவர்களுக்கு பிரதிநிதித் துவம் இருக்காது.
தொழிற்சங்க உரிமைகளில்….
நடைமுறையிலிருக்கும் தொழிலாளர் சட்டங்களை திருத்துவதற்காக நிபுணர் குழு ஒன்றினை மம்தா அரசு அமைத்திருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு தொழிற்சங்க உரிமை கூடாது என அக்குழு கூறியிருக்கிறது. இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்களின் பணி விதிகளில் “முழுமை யான தொழிற்சங்க உரிமை” என்ற அம்சம் புதிதாகச் சேர்க்கப்பட்டது. அதை நீக்கி விட வேண்டும் என்பது இப்போதைய பரிந்துரை.
மாநில தொழிலாளர் நல அமைச்சர் புர்னேந்து பாசு, அரசு ஊழியர்களுக்கு தொழிற்சங்க உரிமை இல்லை என்பதை நியாயப் படுத்து வதற்காக 1926ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங் கம் உருவாக்கிய அரசு ஊழியர் பணி விதி களை மேற்கோள் காட்டியிருப்பது நகைப் பிற்குரியது. மேற்கு வங்க அரசு ஊழியர்களின் ஒருங் கிணைப்புக் குழு மிக வலுவானதாகும். போராடுவதற்கும் பத்திரிகைச் செய்திகள் மற்றும் பேட்டிகள் கொடுப்பதற்கும் அதற்கு இன்று உள்ள உரிமைகளை பறிப்பதுதான் இதன் உடனடி நோக்கம்.
நம்ப முடியாத மம்தா !
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைப்பு சி.பி.ஐ (எம்) கட்சியைப் போன்றதல்ல; 1990 களில் மாநிலம் முழுவதும் எழுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்ட சி.பி.ஐ (எம்) கட்சியின் கட்டுப்பாடான ஊழியர்களைக் கொண்ட அமைப்பினை போன்றதல்ல திரிணாமுல் காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளி யேறிய மம்தா, சுப்ராதோ முகர்ஜி போன்றவர் கள், சிங்கூர், நந்திகிராம்இலால்கர் போராட் டங்களில் மம்தாவுடன் இணைந்த இன் றைய கல்வி அமைச்சர் பிரத்தியா பாசு, தொழி லாளர் நல அமைச்சர் புர்னேந்து பாசு போன்ற போலி இடதுசாரிகள், இன்றைய நிதி அமைச்சர் அமித் மித்ரா, மத்திய ரயில்வே அமைச்ச்சர் தினேஷ் திரிவேதி போன்ற கார்ப்பரேட் பிரதிநிதிகள் என்ற ஒட்டு மொத் தக் கலவையே திரிணாமுல் காங்கிரஸ்.
இவர் களுக்கிடையே தத்துவார்த்த ரீதியிலான ஒற்றுமை எதுவும் இல்லை. ஒரு தனி நபர் என்ற முறையில் மம்தா பானர்ஜி மிகப் பெரும் சக்தி வாய்ந்த தலைவர் என்ற அடிப் படையில் தான் அவர் பின்னால் இவர்கள் இணைந்திருக்கின்றனர். ஆனால், மம்தா பானர்ஜியோ கவர்ச்சிக் கோஷங்களில் அதிகம் நம்பிக்கை வைப்பவர். நீல வண் ணம் பூசுவது போன்ற விசித்திரமான பழக்கங் களைக் கொண்டவர். அரசியலிலும் நிதான மில்லாதவர். ஒரு முறை பி.ஜே.பியுடன் சேருவார், மறுமுறை கழன்று கொள்வார். மாவோயிஸ்ட்டுகளுடன் சேருவார், பின் வெட்டி விடுவார். இத்தகைய நிலையற்ற அர சியல் போக்கு கொண்ட நம்ப முடியாத நபர் தான் மம்தா பானர்ஜி.
சுருக்கம் : இ.எம். n ஜாசப்
நன்றி : எக்கனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி – 3.3.2012

Leave A Reply

%d bloggers like this: