மன்னார்குடி, மார்ச் 5-
மன்னை ஜேசீஸ் மற் றும் பாரதி வித்யாலயா உயர் நிலைப்பள்ளி இணைந்து மரக்கன்று நடும் விழா வினை முதல் சேத்தி கிரா மத்தில் நடத்தியது. மன்னை ஜேசீஸ் தலைவர் ஆசிரியர் எஸ்.அன்பரசு தலைமை வகித்தார்.
நகர்மன்ற துணைத் தலைவர் டி.வரலெட்சுமி, பள்ளியின் தாளாளர் பூமா கிருஷ்ணன், தலைமையா சிரியர் என்.மணிமாறன், பசுமை பிரபஞ்ச பாதுகாப் பாளர்கள் அமைப்பின் நிறு வனர் பால. பாரததமிழன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். முன்னதாக சுமார் 350 மாணவர்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. ஜேசீஸ் மண்டல இயக்குநர் ஜி. கலைச்செல்வன் விழாவை துவக்கி வைத்தார்.
சுமார் 200 மரக் கன்றுகள் வீடுகளில் நடப்பட்டன.மன்னை ஜேசீஸ் முன் னாள் தலைவர்கள் ஜி.ராஜ் குமார், முன்னாள் தலைவர் எஸ்.ராஜகோபாலன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். சிறப்பாக மரக்கன்றுகளை வளர்த்துக் காண்பிக்கும் குழந்தைகளுக்கு அடுத்த ஆண்டு இதே நாளில் பரிசு கள் வழங்கப்படும் என ஜேசீஸ் சார்பாக அறிவிக்கப்பட் டது. செயலாளர் டி.செல்வ குமார் நன்றி கூறினார்.

Leave A Reply