சமூகக் கடமையை புறக்கணிக்கக்கூடாது
கல்விக்கடன் வழங்குவது சம்பந்தமாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒரு சிறப்பான கருத்தை வழங்கியுள்ளது. 60 சதவீதத்திற்கும் குறைவான மார்க் வாங்கி, தனியார் கல்வி நிலையங்களில் நிர்வாக கோட்டாவில் இடம் கிடைக்கப்பெற்றவர்கள், கல்விக் கடனை, தங்களின் உரிமையாகக் கோர முடியாது; அவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வேண்டியதில்லை என்று இந்தியன் வங்கிகளின் கூட்டமைப்பு, வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுகுறித்த ஒரு வழக்கில், கருத்து தெரிவித்துள்ள நீதிபதி சசிதரன், “கிங் பிஷர் ஏர்லைன்ஸ்” போன்ற நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை, ஓடோடிச் சென்று வழங்கும் வங்கிகள், ஏழை மாணவர்களுக்கு மட்டும் விதியைக் காரணம் காட்டி கடனை வழங்க மறுப்பது, சரியல்ல என்றும் வங்கிகள் வேண்டுமானால் தனது கதவுகளை மூடலாம், ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கத்தான் நீதிமன்றங்கள் உள்ளன என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கை டிவிஷன் பெஞ்ச்சுக்கு மாற்றம் செய்துள்ளார். எனவே, சமூகத்தில் பாதிக்கப்பட்ட ஏழை மாணவர்களுக்கு “கல்விக்கடன்” வழங்க விதிகளை கூறாமல், தனது சமூக கடமையை ஆற்ற வங்கிகள் முன்வர வேண்டும்.-
ஆர்.ராஜேந்திரன், தலைவர், ஜிஐசி ஊழியர் சங்கம் (மதுரை மண்டலம்), பழனி
—————–
நல்ல விவாதம்
அரசியல், பொருளாதாரம், சமு தாயம், பண்பாடு முதலிய பல்துறை களில், மக்களுக்குத் தேவையான செய்திகளையும், தலையங்கங்களை யும், சிறப்புக் கட்டுரைகளையும், சூடாகவும், சுவையாகவும் வண்ணப் படங்களுடன் வெளியிட்டு, 2012 புத் தாண்டில், தனது தரத்தை மேன்மேலும் உயர்த்தி வருகிறது ‘தீக்கதிர்’ என் பதை, ஓர் மூத்த எழுத்தாளன் எனும் வகையில் மகிழ்ச்சியுடன் பதிவுசெய்ய விரும்புகிறேன். குறிப்பாக, 20.2.12 இதழில் வந் துள்ள ‘இலக்கியச் சோலை’ பற்றிச் சில எண்ணங்கள்:- “காதல்: இலக்கியங் களில், – நடை முறையில்” எனும் தலைப்புள்ள, மயிலை பாலு தொகுத்த அரைப்பக்கக் கட்டுரை மிகவும் ஈர்த் தது.திரைப்பட இயக்குநர் ஏகாதசி, கவி ஞர் அறிவுமதி, பேராசிரியர் சந் திரா, பத்திரிகையாளர் சு.பொ.அகத்திய லிங்கம் ஆகியோரின் ‘காதலர் தின’ உரைகள், மிக அருமை; அதிலும் தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் உரை, மிகவும் பொருள் பொதிந்தது; தமது குடும்ப வாழ்விலிருந்து- மகள், மகன் காதல் வாழ்வை முன்வைத்து, அவர் வழங்கியுள்ள சீரிய கருத்துக்கள், வாச கர் மனதில் புதிய அலைகளையும், முற்போக்குச் சிந்தனைகளையும் எழுப்பும் என்பதில் ஐயமில்லை. “தமிழில் ஷேக்ஸ்பியர் நாடகங்கள்” எனும் அ.மங்கை கட்டுரையும் பெரி தும் வரவேற்கத்தக்கது.-
தி.க.சி., நெல்லை- 6
————-
இனியும் காலம் கடத்தக்கூடாது
“துப்பாக்கி முனையில் இலங்கைத் தமிழர்கள்” என்ற எஸ்.திருநாவுக் கரசின் கட்டுரையைத் தீக்கதிரில் படித் தேன்.ராஜ பக்சே அரசின், கொடுங்கோன் மையை மிகவும் தெளிவாக விளக்கு கிறது கட் டுரை. தமிழர்களை இரண் டாம்தர குடி மக்களாக நடத்தும் வரை, பெரும் பான்மை இனவெறி அரசி யலை கை விடும் வரை, இலங்கையில் அமைதி நிலவ சாத்தியமில்லை. எத்தனை செக் போஸ்ட் போட் டாலும், முள்வேலிகளுக்குள் அடைத் தாலும், தமிழ்மக்களின் உரிமைப் போராட்டம் என்பது ஆர்த்து எழவே செய்யும். புலிகளின் வன்முறையைக் காட்டி, இனியும் காலம்கடத்த முடியாது.-
தமிழமுதன், அரூர்
————–
பிடிவாதம் தேவையில்லை
கூடங்குளம் அணு உலை பிரச் சனையில், உதயகுமார் காட்டும் பிடி வாதம் சரியாகத் தெரியவில்லை; அது வும் 13 ஆயிரம் கோடி ரூபாயை அள் ளிக் கொட்டி, பணிகள் எல்லாம் முடிந்து விட்ட நிலையில்.. அணு உலையால் என்னென்ன ஆபத்து ஏற்படும் என்று உதயகுமார் கூறுகிறாரோ, அத்தனை ஆபத்தும், கூடங்குளம் அணு உலையை இயக்கி னாலும், இயக்காவிட்டாலும் ஏற் பட்டுத்தான் ஆகும். ஏனெனில் அணு உலையை நிறுவாத வரைதான் எதிர்ப் பில் அர்த்தம் இருக்கும். அமைத்த பின்பு, அதை நிறுத்தி வைத்தாலும் ஆபத்துதான். கூடங்குளத்தைப் பொறுத்தவரை அணு உலைகளை நிறுவியாயிற்று. எனவே, இங்கு பிடி வாதம் தேவையில்லை. இனிமேல் –
வில்சன் பாக்கியராஜ், தூத்துக்குடி
———————
எதற்கு பாராட்டு?
திரிணாமுல் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினரே, மேற்குவங்கத்தில் மம்தா மோசமாக ஆட்சி செய்வதாக கூறியிருக்கிறார். தடாலடிப் பேர் வழிகளுக்கு, வாய்தான் நீளுமே தவிர, அவர்கள் உருப்படியாக எதையும் செய்ய மாட்டார்கள். மம்தாவும் அந்த கேஸ்தான்.இந்த லட்சணத்தில், மம்தாவை பில்கேட்ஸ் பாராட்டினாராம். இந்தியா விலேயே போலியோ இல்லை என் றான பிறகு, மம்தாவுக்கு தனிப்பாராட்டு ஏன்? என்பதை பில்கேட்ஸ் சொல்ல வேண்டும்.மம்தா ஆட்சிக்கு வந்த நாள்முதல், அரசு மருத்துவமனைகளில், குழந்தை கள் இறப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொலை, கொள்ளைகள் அதி கரித்து வருகின்றன. பாலியல் குற்றங் களுக்கும் பஞ்சமில்லை. பில்கேட்ஸின் பாராட்டு இதற்குத்தானோ என்னவோ?அதுமட்டுமல்ல, மேற்குவங்கத்தில் கடந்த தேர்தலில், இடதுசாரிகளுக்கு எதிராக அமெரிக்கா பணத்தை கோடி கோடியாக கொட்டிதும் இதற்குத் தானே..!-
தி.செல்வம், அனுப்பர்பாளையம்

Leave A Reply

%d bloggers like this: