சென்னை, மார்ச் 5-
ஊதிய உயர்வு கோரி போராடிவரும் செவிலியர் மற்றும் ஊழியர்களுக்கு உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக்குழு ஆதரவு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஒருங் கிணைப்புக்குழுவின் மாநில அமைப்பாளர் மாலதி சிட்டி பாபு விடுத்த அறிக்கை வரு மாறு:
சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் பணி யாற்றும் செவிலியர்கள் மற் றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி கடந்த 3 நாட் களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை காவல் துறை மூலமாக தீர்க்க எத் தனிக்கக்கூடாது. அவர் களை தங்கும் விடுதிகளிலி ருந்து வெளியேற்றுவது போன்ற அநாகரீக முறை களை அனுமதிக்கக்கூடாது.
அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு உழைக் கும் பெண்கள் தமிழ் மாநில ஒருங்கிணைப்புக்குழு (சிஐ டியு) தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்வதோடு, தமிழக அரசு இப்பிரச் சனையில் வேடிக்கை பார்க் காமல் சுமூக தீர்வு காணத் தேவையான நடவடிக்கை களை உடனடியாக மேற் கொள்ளவேண்டுகிறோம்.அரசு மருத்துவமனை களில் பணியாற்றும் செவி லியர் மற்றும் ஊழியருக்கு வழங்கும் ஊதியத்தில் பாதி யளவிற்குக்கூட தனியார் மருத்துவமனைகளில் பணி புரியும் அதே அளவு படிப் பும், திறமையும், தகுதியும் உள்ள செவிலியர்,ஆய்வகம் மற்றும் இதர ஊழியர் களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது கண்டனத்திற்குரி யது.
மேலும் தனியார் மருத் துவமனை நிர்வாகங்கள் இவர்களிடம் சான்றிதழ் களை வாங்கி வைத்துக் கொள்வதும், 2 ஆண்டு களுக்கு எங்கும் செல்லக் கூடாது என்று பிணை ஒப் பந்தம் போடுவதும் போன்ற மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. இது ஒரு வகையில் கொத்தடிமை முறையாகும். 12 மணிநேர வேலைசெய்ய வைப்பதும் சட்ட விரோதமாகும்.எனவே, மாநில அரசு தனது மருத்துவமனைகளில் வழங்குவதுபோல் தனியார் மருத்துவமனைகளில் பணி புரியும் செவிலியர் மற்றும் ஊழியர்களுக்கும் இணை யாக அவரவர் தகுதிகேற்ப ஊதியம் வழங்கப்படுவதை உத்தர வாதப்படுத்த வேண்டும்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோரை நிர் வாகங்கள் பழிவாங்குவதை தடுத்துநிறுத்தி தொழி லாளர் துறை மூலம் நியாய மான தீர்வை உண்டாக்க வேண்டும்.தனியார் மருத்துவ மனைகளை போலவே தனி யார் பள்ளிக்கூடங்களும், கல்வி நிறுவனங்களும் தங் களிடம் பணியாற்றும் ஆசி ரியர்களுக்கும், ஊழியர்க ளுக்கும் மிகக் குறைந்த ஊதியம் வழங்கி சுரண்டி வருகின்றன. அவர்களுக்கும் அரசு ஊதியத்தை கணக்கில் கொண்டு நியாயமான ஊதி யத்தை தகுதிக்கேற்ப தீர் மானிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: