திருவள்ளூர், மார்ச், 5 –
பொன்னேரி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும், இருக்கிற எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற கருவிகளை இயக்க வேண் டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திங்களன்று (மார்ச் 5) உண்ணாவிரதம் நடை பெற்றது.பொன்னேரியில் அமைந் துள்ள அரசு பொது மருத்து வமனைக்கு கும்மிடிப் பூண்டி, ஊத்துக் கோட்டை, மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 400க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல் கின்றனர். இதில் மருத்துவர் களை நியமிப்பது உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி யும் எந்த விதமான முன் னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக நோய்கள் உருவாக் கும் இடமாக மாறிவருகி றது. மகப்பேறு மருத்துவர் கள் இல்லாமலே பிரசவம் பார்க்கும் நிலை உள்ளது.இஎன்டி மருத்துவர் தனியாக கிளினிக் துவங்கி யுள்ளதால் அரசு மருத்துவ மனையில் முறையாக பணி யாற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள் ளது. புதியதாக எக்ஸ்ரே கருவி இருந்தும், வெளியில் எடுத்து வர தலைமை மருத் துவரே பரிந்துரைக்கிறார் என்கிறார்கள். அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டும், பிரேத பரி சோதனை அறைக்கு குளி ரூட்டி பொறுத்த வேண்டும். இதய நோய், எலும்பு முறி வுக்கு அவசர கால பரிவு ஒன்றை துவக்க வேண்டும், எந்த வகையான நோயாளி கள் வந்தாலும் சென்னைக்கு பரிந்துரை செய்யும் வேலை மட்டும் மருத்துவர்களின் பணியாக உள்ளது.இந்த நிலையால் தனி யார் மருத்துவமனைகள் தான் பயனடைகின்றன. இந்த அவலநிலையை போக்க வேண்டும் என வலி யுறுத்தி வாலிபர் சங்கத்தின் சார்பில் பொன்னேரி அம் பேத்கர் சிலைமுன்பு நடை பெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு பகுதி துணைத் தலைவர் எஸ்.பாஸ் கரன் தலைமை தாங்கினார். இதில் வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செய லாளர் எஸ்.கோபால், பகுதி செயலாளர் என்.ஜீவா, வி.பிரேம்குமார், எம்.ராஜ் கமல், வி.கர்ணாகரன் ஆகி யோர் பேசினர். வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எஸ்.செந்தில்குமார் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார். பகுதி துணைத் தலைவர் ஜி.கோபி நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: