விழுப்புரம், மார்ச் .5-விழுப்புரம் மாவட்டம் குமளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (24) என்பவர் சனிக்கிழமை தனது வீட்டில் தனியாக இருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
உடனே சாந்தி சப்தம் போட்டதையடுத்து ஞானவேல் தப்பி ஓடிவிட்டார். பின்னர் சாந்தியை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தகவலை அறிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமூர்த்தி பாதிக்கப்பட்ட சாந்தியை பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமமூர்த்தி, தப்பி ஓடிய ஊராட்சி மன்றத் தலைவரை கைது செய் யும்படி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் நிச்ச யம் கைது செய்வார்கள் என்றும் கூறினார். சிபிஎம் கண்ட மங்கலம் ஒன்றிய செயலாளர் எம்.பழனி, விக்கிரவாண்டி ஒன்றியச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகளுள் உடன் இருந்தனர்.

Leave A Reply