விழுப்புரம், மார்ச் 5-
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வட்டம் குமளம் கிராமத்தில் கூலி தொழிலாளி பெண்ணிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட ஊராட்சிமன்ற தலைவரை காவல்துறையி னர் உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத் தப்பட்டுள்ளது.
குமளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (24) என்பவர் சனிக்கிழமை தனது வீட்டில் தனியாக இருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் பாலியல் வன் புணர்ச்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.உடனே சாந்தி சப்தம் போட்டதையடுத்து அக் கம் பக்கதில் இருந்தவர்கள் திரண்டதால் ஞானவேல் தப்பி ஓடிவிட்டார். மன நிலை பாதிக்கப்பட்ட நிலை யில் சாந்தியை அவரது உற வினர்கள் முண்டியம்பாக் கம் அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தகவலை அறிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமூர்த்தி பாதிக்கப்பட்ட சாந்தியை பார்த்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய ராமமூர்த்தி, தப்பி ஓடிய ஊராட்சி மன் றத் தலைவரை கைது செய் யும்படி காவல் துறையின ருக்கு தகவல் தெரிவித்துள் ளதாகவும் அவர்கள் நிச்ச யம் கைது செய்வார்கள் என்றும் கூறினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ட மங்கலம் ஒன்றிய செயலாளர் எம். பழனி, விக்கிரவாண்டி ஒன் றியச் செயலாளர் ஏ.கிருஷ் ணமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகளும் மற்றும் சாந்தியின் உறவினர் களும் உடன் இருந்தனர்.

Leave A Reply