அம்பத்தூர், மார்ச், 5 -பூந்தமல்லி கீழ்மா நகரில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி அமுதா (42). இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை வியாசர் பாடியில் உறவினர் வீட் டுக்கு இருசக்கர வாகனத் தில் சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.அம்பத்தூர் தொழிற் பேட்டை அருகே வந்து கொண்டிருக்கும் போது, பின்னால் இருசக்கர வாக னத்தில் வந்த இருவர் அமுதா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத் தில் தப்பி விட்டனர்.இதுகுறித்து அம்பத்தூர் தொழிற் பேட்டை காவல் துறையி னர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர். அப்பகுதியில் கொள் ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து வருவது குறிப் பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: