சென்னை, மார்ச், 5 -கொரட்டூர் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் சுப்பிரமணி. இவரது மனைவி கஜலட்சுமி (65). இவர் தனது மருமகள் கீதா (35) உடன் ஞாயி றன்று வியாசர்பாடியில் நடந்த திருமணத்துக்கு செல்வ தற்காக கொரட்டூர் பேருந்து நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 47வது தெருவில் நடந்து வரும் போது அவர்களை ஒரு வாலி பர் மறித்து மிரட்டி கஜலட்சுமி அணிந்திருந்த 2 சவரன் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினான். இருவரும் திருடன் திருடன் என்று கூச்சல் போட்டனர். கூச்சல் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் ஓடிச் சென்று நகையை பறித்துக் கொண்டு ஓடிய வாலிபரை பிடித்து சரமாரியாகத் தாக்கினர். அவனிடம் இருந்து சங்கிலியையும் கைப்பற்றினர்.பின்னர் அந்த வாலிபரை கொரட்டூர் காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர். கொரட்டூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசார ணையில் அந்த வாலிபர் கொரட்டூர் செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜெகன் (35) என்பது தெரிந் தது. அவனை கைது செய்து, மேலும் ஏதாவது வழிப்பறி யில் ஈடுபட்டுள்ளானா என்று விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: